/* */

123 திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.4000 : அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிறபணியாளர்களுக்கு ரூ.4000ம் 10கிலோ அரி 15மளிகைபொருட்களை வழங்கினார்.

HIGHLIGHTS

123 திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.4000 : அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்
X

திருக்கோவில்களில் மாத ஊதியம் இன்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண நிதி ரூ.4000/- மற்றும் 10 கிலோ அரிசியுடன் 15 வகையான மளிகைப் பொருட்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் திருக்கோவில்களில் மாத ஊதியம் இன்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண நிதி ரூ.4000ம் 10 கிலோ அரிசியுடன் 15 வகையான மளிகைப் பொருட்களை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன் காக்கும் வகையிலும், விவசாயம் சிறந்து விளங்கும் வகையிலும், மேட்டூர் அணையிலிருந்து நீர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்கள். அவ்வாறு வரும் நீர் கடைமடை வரை தங்குதடையின்றி நீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீர்நிலைகள் வரத்து கால்வாய்கள் முறையாக போர்கால அடிப்படையில் தூர்வாரப்பட்டு, வருகிறது. அவ்வாறு நடைபெற்று வரும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி பணிகள், மக்கள் நலத்திட்டங்கள், தமிழ்நாட்டிக்கு தேவையான நிதி மற்றும் உரிமையை நிலைநாட்டும் விதமாக புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் 17.06.2021 அன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். தமிழக அரசு தமிழக மக்கள் வாழ்விற்கு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நீண்ட காலத்திற்கு பயன்தரும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களின் பயன் நேரடியாக பொதுமக்களை சென்றடையும் வண்ணம் திறம்பட செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து அரசு நலத்திட்டங்களையும் கடைக்கோடி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப் பெறும் வகையில் சிறப்பான நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு காலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் திருக்கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாததால், திருக்கோவில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், திருக்கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதியுதவி வழங்கிட வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள். இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர், திருக்கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு, திருக்கோயில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் திருக்கோயில் அர்ச்சகர்கள். பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், இதர பணியாளர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு உத்தரவிட்டு, அத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, இன்று அரியலூர் மாவட்டத்தில் திருக்கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள். பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்கள் என 123 நபர்களுக்கு தலா ரூ.4,000/- வீதம் ரூ.4 இலட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவி மற்றும் 10 கிலோ அரிசியுடன் 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. இதுபோன்ற மக்களின் நலன் காக்கும் வகையில் இந்தியாவிற்கே முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு விளங்கி வருகிறது. ஆகவே, தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் முத்தான பல அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளுமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

பின்னர், அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி செல்வி.தித்து அஸ்வதினி தனது சேமிப்பான உண்டியல் ரூ.2500/-ஐ அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் ஏழுமலை, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்செல்வி, ஊராட்சிமன்றத் தலைவர் ஆர்த்தி சிவக்குமார், அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோயில் பரம்பர அறங்காவலர்கள் ஜி.ராமச்சந்திரன், ராமதாஸ், வெங்கடாஜலபதி, செயல் அலுவலர்கள், கலந்துகொண்டனர்.

Updated On: 19 Jun 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்