/* */

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் அரியலூர் மாவட்ட நிர்வாகம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஸ்ரீரமேஷ்சந்த்மீனா நேரடியாக ஆய்வுமேற்கொண்டார்

HIGHLIGHTS

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயார் நிலையில்  அரியலூர் மாவட்ட நிர்வாகம்
X

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உறுப்பினர் செயலர் ஸ்ரீரமேஷ் சந்த் மீனா. உடன்  அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ. ரமணசரஸ்வதி

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஸ்ரீரமேஷ் சந்த் மீனா, மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தாழ்வான மற்றும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், பொதுப்பணித்துறையின் மூலம் சிறப்பு தூர்வாரும் திட்டங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் மழைநீர் வடிகால்களை தூய்மைப்படுத்தும் பணி உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தமிழக அரசு மூலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஸ்ரீரமேஷ் சந்த் மீனா திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாரணவாசி கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

மழைக்காலத்தில் பெய்யும் அதிகப்படியான மழைநீரானது நீர்நிலைகளுக்கு செல்லும் வகையிலும், குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகாத வகையிலும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் வேட்டக்குடி உபரிநீர் வாய்கால் 4000 மீட்டர் தொலைவில் சிறப்பு தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளதையும், கரைவெட்டி கிராமத்தில் ரூ.17.50 இலட்சம் மதிப்பீட்டில் ஆண்டி ஓடையில் 5000 மீட்டர் தொலைவில் தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளதையும்,

வேட்டக்குடி உபரிநீர் வாய்கால் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் 5000 மீட்டர் தொலைவில் சிறப்பு தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர், அரசு தெரிவித்துள்ளபடி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மழைக்காலங்களில் மழைநீரானது தங்குதடையின்றி செல்லும் வகையில் கோரைபற்கள் முழுமையாக அகற்றி சீரான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

வெங்கனூர் கிராமத்தில் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் ஆண்டிஓடையில் 5000 மீட்டர் தொலைவில் உபரிநீர் வாய்காலில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு தூர்வாரும் பணிகளையும், கோவில்எசணை கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.5.56 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளையும் பார்வையிட்டு, மழைக்காலங்களில் மழைநீரானது சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மழைக்காலங்களில் சேதமாகும் சாலைகளை சீரமைக்கும் வகையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் மின் அறுவை இயந்திரங்கள் மற்றும் வெள்ளநீர் உட்புகாத வகையில் தேவையான அளவு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதையும் கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார். மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஸ்ரீரமேஷ் சந்த் மீனா வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், திட்ட இய்ககுநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், உதவி செயற்பொறியாளர் (ஆ.பா.கோ) ஜெயராமன், வட்டாட்சியர் ராஜமூர்த்தி, உதவிப்பொறியாளர் திவ்யபிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், ஜாகீர்உசேன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 26 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?