/* */

திருமானூரில் முப்படை தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி

அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில், மறைந்த முப்படை தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி

HIGHLIGHTS

திருமானூரில் முப்படை தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி
X

திருமானூர் பேருந்து நிலையம் அருகில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில், மறைந்த முப்படை தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கத்தின் ஒன்றிய தலைவர் மூர்த்தி தலைமையில், செயலாளர் நடராஜன், லயன்ஸ் சங்க ஒன்றிய தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரின் திருவுருவ படத்துக்கு, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மறைந்த முப்படை தளபதி மற்றும் ராணுவ வீரர்கள் உருவப் படத்துடன், திருமானூர் பேருந்து நிலையத்திலிருந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது.

திருமானூர் காவல் உதவி ஆய்வாளர் அப்துல்ரஜாக், லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் பாஸ்கர், பொருளாளர் கணேசன், முப்படை வீரர்கள் நலச்சங்க உறுப்பினர்கள் ஜெயராமன், ஊராட்சி தலைவர்கள் திருமானூர் உத்திராபதி, குருவாடி சுப்புலெட்சுமி வீரரவி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Dec 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!