/* */

அரியலூர் நகராட்சி நிலைக்குழு தேர்தல் 2-ம் முறையாக ஒத்தி வைப்பு

அரியலூர் நகராட்சி நிலைக்குழு தேர்தல் 2-ம் முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் நகராட்சி நிலைக்குழு தேர்தல் 2-ம் முறையாக ஒத்தி வைப்பு
X

நிலைக்குழு தேர்தல் தொடர்பாக அரியலூர் நகராட்சி கூட்டம் இரண்டாம் முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

அரியலூர் நகராட்சியில் இன்று காலை 9:30 மணிக்கு 2ம்முறையாக நகராட்சி நியமனக்குழு, வரிமேல்முறையீட்டுக்குழு மற்றும் ஒப்பந்தப்புள்ளி குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் நடைபெறுவதாக அரியலூர் நகராட்சியின் ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலரான சித்ரா சோனியா அறிவித்திருந்தார்.

இதனையடுத்து நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க உறுப்பினர்கள் 8வது வார்டு ராஜேந்திரன், ஒன்பதாவது வார்டு மகாலட்சுமி, 10வது வார்டு இன்பவல்லி, 11வது வார்டு முகமது இஸ்மாயில், 13வது வார்டு வெங்கடாஜலபதி, 17வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜீவாசெந்தில் மற்றும் 12வது வார்டு கவுன்சிலர் மலர்கொடி மனோகரன் ஆகிய 7 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர்.

தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது ஆதரவு கவுன்சிலர்கள் 11பேர் நகர்மன்ற கூட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் பங்கேற்கவில்லை.

போதிய உறுப்பினர்களின் கோரம் இல்லை என்பதால் இன்று நடைபெற இருந்த நியமன குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா அறிவித்தார்.

அரியலூர் நகராட்சி துணைத்தலைவர் மற்றும் நியமனக்குழு, வரிமேல் முறையீட்டுக்குழு மற்றும் ஒப்பந்தப்புள்ளி குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல்கள் தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது ஆதரவு கவுன்சிலர்கள் 11பேர் நகர்மன்ற கூட்டத்தில் பங்கேற்காததால் இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டடுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 April 2022 7:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?