/* */

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் இடம் பெற்றுள்ளதா அல்லது ஒரே வாக்காளரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளதா என்பதை கண்டறியவும் வாக்காளர்களிடமிருந்து தன்விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலில் இணைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இப்பணியானது 01.08.2022 முதல் துவங்கப்படவுள்ளது.

வாக்காளர் தன்விருப்பதின் அடிப்படையில் (Voluntary basis) தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பயன்பாட்டு செயலிகளான NVSP மற்றும் VHP ஆகியவற்றை பயன்படுத்தி இணைய வழியில் 6B- படிவத்தை பூர்த்தி செய்து தாங்களே நேரடியாக ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ளலாம் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக இப்பணிக்கு வரும்போது தன்விருப்பதின் அடிப்படையில் படிவம் 6B – யினை பூர்த்தி செய்து சமர்ப்பித்தும் அல்லது இது தொடர்பாக நடைபெற உள்ள சிறப்பு முகாம்களிலும் 6B – படிவம் சமர்ப்பித்தும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக்கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலை மேம்படுத்திட ஏதுவாக, வாக்காளர் அனைவரும் தன் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை அளித்து, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 22 July 2022 6:23 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!