/* */

அரியலூர்: மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்

அரியலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

அரியலூர்:   மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்
X

அரியலூர் மாவட்டத்தில் அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்கள்.

அரியலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிடப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே அரியலூர் மாவட்டத்தில் வினியோகிக்கப்படும் மக்காசோள விதைகளில் கலப்படம் உள்ளதா என கண்டறியப்பட வேண்டும்.என விவசாயிகள் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் வேளாண்துறை சார்ந்த அதிகாரிகள் களஆய்வு செய்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆய்வு நடத்தப்படும் என உறுதி அளித்தனர்.

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலுக்கு உள்ளான பயிர்களை காப்பாற்றுவதற்கு ஏதுவாக அதற்கான பூச்சிக்கொல்லி மருந்துகளை பரிந்துரையும் செய்தார்கள். வரும் காலங்களில் இது போன்ற பாதிப்புகள் மிகவும் குறையும் என்றும் எடுத்துரைத்தார்கள்.

அதன்பிறகும் வருடா வருடம் பூச்சித்தாக்குதல் அதிகமாகவே இருந்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் வினியோகிக்கப்படும் விதைகளின் முளைப்புத் தன்மையும் குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஒருமுறை பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தால் சற்று தாக்குதல் குறைவாக இருந்து வந்த நிலையில், இந்தாண்டு மிக மோசமாக இரு முறை பூச்சிக்கொல்லி தெளித்தும் பூச்சி தாக்குதலின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

மக்காச்சோள பூவிலிருந்து ஏற்படும் மகரந்தச் சேர்க்கையால் மட்டுமே மக்காச்சோளக் கதிர் வளர்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு பூச்சித்தாக்குதல் வீரிய தன்மை அதிகமாக உள்ளதால் மக்காசோளத்தின் மேல் பகுதியில் வரும் பூ முற்றிலும் பூச்சி தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மகசூல் இழப்பு நிச்சயமாக 70 முதல் 90 சதவிகிதம் குறையும் என்பதால் மகசூலை இழந்து விவசாயிகள் தவிக்கின்றனர்.

கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறாத விவசாயிகளுக்கும், மக்காசோள பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைதுறை மூலமாக ஏற்பாடு செய்து, மானாவாரி விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து காத்திட வேண்டுமாய் மாவட்ட கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 28 Oct 2021 6:50 AM GMT

Related News