/* */

2 நகராட்சிகளில் 20 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு

அரியலூர்-ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 20 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

2 நகராட்சிகளில் 20 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு
X

பைல் படம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 நகராட்சிகள் உள்ளன. இதில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், அரியலூர் நகர்மன்ற தலைவர் பதவி பொதுப்பிரிவில் பெண்களுக்கும், ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோரில் பொதுவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரியலூர் நகராட்சியில் உள்ள மொத்தம் 18 வார்டுகளில், 18-வது வார்டு தாழ்த்தப்பட்டோரில் பொதுவுக்கும், 10-வது வார்டு தாழ்த்தப்பட்டோரில் பெண்களுக்கும், 1, 2, 5, 6, 9, 12, 14, 15 ஆகிய வார்டுகள் பொதுவில் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3, 4, 7, 8, 11, 13, 16, 17 ஆகிய வார்டுகள் பொதுவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள மொத்தம் 21 வார்டுகளில் 2, 18 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோரில் பொதுவுக்கும், 9, 10 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோரில் பெண்களுக்கும், 4, 7, 13, 15, 16, 17, 19, 20, 21 ஆகிய வார்டுகள் பொதுவில் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1, 3, 5, 6, 8, 11, 12, 14 ஆகிய வார்டுகள் பொதுவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரியலூர்-ஜெயங்கொண்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு வாங்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்தால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விடும்.

Updated On: 25 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...