/* */

டி20 உலககோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.

HIGHLIGHTS

டி20 உலககோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
X
சூப்பர் 12 சுற்றில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றது.

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டி இன்று துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணி முதல் பேட்டிங் செய்தது. ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக டெம்போ பாவுமா, குயின்டன் டி காக் ஆகியோர் இறங்கினர்.

க்ளென் மேக்ஸ் வெல் வீசிய பந்தில் பிளைடு இன் முறையில் போல்டு ஆனார். இவர் 7 பந்துகளை சந்தித்து 12 ரன்களை எடுத்தார். குயின்டன் டி காக், ஹேசில் வுட் வீசிய பந்தில் அவுட்டானார். இவர் 12 பந்துகளை சந்தித்து 7 ரன்களை எடுத்தார்.ராசி வான் டெர் டுசன் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 2வது டவுனில் இறங்கிய ஐடன் மார்க்ராம் 36 பந்துகளை சந்தித்து 40 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் அவுட்டானார்.ஹென்ரிச் கிளாசென் 13 ரன்னிலும், டேவிட் மில்லர் 16 ரன்னிலும், டுவைன் பிரிட்டோரியஸ் 1 ரன்னிலும், கேசவ் மகராஜ் டிக் அவுட் ஆனார். அன்ரிச் நார்ட்டேஜே 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கனிநோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி 118 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 119 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக இருந்தனர்.

துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் வார்னர் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். மிட்செல் மார்ஷ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 38 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், சற்று நிதானமாக ஆடிய ஸ்மித் 35 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். மேக்ஸ்வெல் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது அணியின் ஸ்கோர் 81.

முன்வரிசை வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கை எட்டுமா என்கிற நிலை இருந்தது. எனினும், மார்கஸ் ஸ்டோய்னிஸ்- மேத்யூ வேட் ஆகிய ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டத்தில் பதற்றம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஓவரை எதிர்கொண்ட ஸ்டோய்னிஸ், முதல் பந்தில் 2 ரன்களையும், 2வது மற்றும் 4வது பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் சேர்த்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On: 23 Oct 2021 5:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?