/* */

மும்பை - பெங்களூரு அணிகள் மோதும் ஐ.பி.எல் முதல்போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

சென்னையில் இன்று ஐ.பி.எல்.-ன் 14 வது சீசன் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

HIGHLIGHTS

மும்பை - பெங்களூரு அணிகள் மோதும்  ஐ.பி.எல் முதல்போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
X

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்ளும். இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சத்தால் 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அங்கு நடைபெற்றது.

இந்த நிலையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கடும் கட்டுப்பாடுகளுடன் இந்தியாவிலேயே 14 ஐ,பி.எல் போட்டிகள் நடத்தப்படுகிறது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (9ம் தேதி) தொடங்கி, மே 30-ம் தேதி வரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும் லீக் சுற்று போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் மே 30-ந்தேதி நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மோதுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி முதல் லீக் போட்டியில் வெற்ற வாய்பை இழப்பது தொடர் கதையாக உள்ளது. 2013-ம் ஆண்டில் இருந்து அந்த அணி தொடர்ந்து 8 சீசனில் தங்களது முதல் லீக்கில் தோற்று வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இதுவரை 27 முறை மோதியுள்ளது. இதில் 17 முறை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 9 முறை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இன்று விளையாட உள்ள அணியின் உத்தேச பட்டியல்

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், ஜேம்ஸ் நீஷம், குருணல் பாண்ட்யா, நாதன் கவுல்டர்-நிலே அல்லது ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உத்தேச பட்டியல்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், முகமது அசாருதீன், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜாமிசன், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Updated On: 9 April 2021 2:48 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...