/* */

இரண்டு கண்ணும் துடித்தால் என்ன பலன் உண்டாகும்..? தெரிஞ்சுக்கங்க..!

Muscle Twitching Meaning in Tamil-கண் துடிப்பதால் ஏற்படும் பலன்களை மூட நம்பிக்கை என்று சிலர் கூறினாலும், சில பலன்கள் நம்பிக்கை ஊட்டும் உந்துசக்தியாக இருக்கும் என்பதை மறுக்கமுடியாது.

HIGHLIGHTS

இரண்டு கண்ணும் துடித்தால் என்ன பலன் உண்டாகும்..? தெரிஞ்சுக்கங்க..!
X

twitching meaning in tamil-கண் துடித்தல் பலன்கள் (கோப்பு படம்)

Muscle Twitching Meaning in Tamil

எதிர்காலம் குறித்த கவலை நம்மில் பலருக்கு இருக்கிறது. எதிர்காலம் எப்படி அமையும் என்று அறிந்துகொள்வதற்கு ஜோதிட கலையில் கைரேகை சாஸ்திரம், எண்கணித சாஸ்திரம், ஜாதகத்தை கொண்டு பலன்கள் கூறுவது போன்ற அனைத்துமே வரும் காலத்தில் நமது வாழ்க்கையில் ஏற்படப்போகிற நிகழ்வுகளை ஓரளவு அறிந்துகொள்ள உதவுகின்ற கலைகளாகும்.

அதேபோல உடலில் சில பாகங்களில் ஒரு துடிப்பு ஏற்படும். உடலின் பல பாகங்களில் ஏற்படும் இத்தகைய துடிப்புகள் நமக்கு ஏற்படவிருக்கும் நன்மை, தீமைகளை பற்றி கூறும் அறிகுறிகளாக பெரும்பாலான மக்களால் பார்க்கப்படுகிறது. அதில் முக்கியமாக கண் துடிப்பது.

இந்த கட்டுரையில் கண் துடிப்பதற்கு காரணங்கள் மற்றும் அதற்கான பலன்களையும் தெரிந்துகொள்வோம் வாங்க.

Muscle Twitching Meaning in Tamil

கண் துடிக்கும் பலன்

கண்துடித்தல் என்பது கண்களை சுற்றியிருக்கும் நரம்புகள், நாளங்களில் சில சமயம் அதிக அழுத்தத்துடன் ரத்தம் பாயும்போது அந்தப்பகுதிகளில் வேகமான துடிப்பு ஏற்படுவதை உணர முடியும். இது உடல் சார்ந்த ஒரு செயல்பாடு.

இருப்பினும் கண்துடிப்பு ஏற்படுவது நமக்கு ஏற்படப்போகும் நன்மை மற்றும் தீமைகளை முன்னறிவிப்புச் செய்யும் ஒரு அறிகுறியாகவே பழங்காலம் தொட்டு கருதப்பட்டு வருகிறது. "கலித்தொகை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம்" போன்ற தமிழ் இலக்கியங்களிலும் கண்துடித்தல் உண்டாவதால் ஏற்படும் பலன்கள் குறித்து கூறப்படுகின்ற வரிகள் இருக்கின்றன.

கண்களை காக்கும் கண் இமைகள், புருவங்கள், ஒட்டுமொத்த கண்களை சார்ந்த பகுதிகள் ஆகிய ஒவ்வொன்றும் துடிப்பதற்கேற்ப ஒவ்வொரு பலன்கள் கூறப்படுகின்றன.

பலன்கள்

ஆண்களுக்கு வலது கண்பகுதியில் துடிப்பு ஏற்படுதல் நன்மை ஏற்படும். அதாவது ஏதாவது ஒரு வழியில் நல்லது நடக்கும்.

பெண்களுக்கு இடது கண்பகுதியில் துடிப்பு ஏற்பட்டால் அது நற்பலன்கள் ஏற்படபோவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

Muscle Twitching Meaning in Tamil

அதுவே ஆண்களுக்கு இடது கண் பகுதியிலும், பெண்களுக்கு வலது கண் பகுதியிலும் துடிப்பு ஏற்பட்டால் அது கெடுதலான பலன்கள் ஏற்படுவதற்கான அறிகுறி என ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு பிரிவான, துடிசாஸ்திரநூல் கூறுகிறது.

ஆண்கள்

ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ், பெருமை ஏற்படும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் சீக்கிரத்தில் தீரும். வலது கண்ணின் கீழ் சதைப்பகுதி துடித்தால் செல்வமும், புகழும் உண்டாகும். இடது புருவம் துடித்தால் வம்பு, வழக்குகள் ஏற்படலாம்.

பெண்கள்

பெண்களுக்கு இடது கண்பகுதி முழுதும் துடித்தால் செல்வம், புகழ் உண்டாகும். இடது கண்ணின் மேல் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் அனைத்தும் விரைவில் தீரும். அதேநேரத்தில் வலது கண்ணின் கீழ் இமை துடித்தால் கணவருக்கு உடல்பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே நேரத்தில், அவர்களின் இரண்டு கண்களின் புருவங்கள் சேர்ந்து துடித்தால் அவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படும்.

இது ஒரு நம்பிக்கைத்தான். நல்லது ஏற்படப்போகும் என்ற நம்பிக்கை புதிய உத்வேகத்தை உருவாக்குவதால் அவர்களின் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும். அதனால் அவர்கள் எடுத்த காரியத்தில் வெற்றி அடைகிறார்கள். அதற்கு காரணம் பலன்கள் மீதான நம்பிக்கை.

Muscle Twitching Meaning in Tamil

அதேநேரத்தில் எதிர் பலன் உடையவர்கள் எதிலும் ஜாக்கிரதையாக இருக்க நினைப்பார்கள். அந்த எச்சரிக்கை உணர்வு அவர்களுக்கு ஏற்படக்கூடிய தீங்கான விஷயங்களை தடுப்பதற்கான வழியாக அமையும். ஆக மொத்தத்தில் இந்தப்பலன்கள் கூட உளவியல் சார்ந்த விஷயமே.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Feb 2024 5:40 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...