/* */

குல தெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்!

ஆயிரம் தெய்வங்கள் இருந்தாலும், இஷ்ட தெய்வங்களாக நாம் வழிபட்டாலும், குல தெய்வத்துக்கு என மகிமையும், பெருமையும் உண்டு.

HIGHLIGHTS

குல தெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்!
X

வாழ்வு வளமாக அமைய,  குல தெய்வங்களை வழிபடுவோம்.

குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்க கூடாது. குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு செய்த பலன் தரும். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை, குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.. குலதெய்வத்தால் ஆகாத காரியம் எதுவுமில்லை என்பது முன்னோர்களின் வாக்கு.

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும். குலதெய்வத்தை வணங்குவது மிக முக்கியம். வம்சத்தை காக்க முதலில் வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான். வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம்.

நம் இஷ்ட தெய்வம் என்னதான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.

குலதெய்வம் நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகள் பலன்களையும் பெற்றுத் தரும் குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தி அளவிட முடியாது. சிறுதெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள்தான். இந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வாழ்வு படைத்தவை. எனவேதான், அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால், குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம் குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம் தான். இந்த குலதெய்வம் மனித வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது.

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக் கொண்டு வருகிறார்களோ, அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

குலதெய்வ வழிபாடு முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம், ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை வணங்கினாலும், குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீக வழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம். குலதெய்வத்தை மறப்பது பெற்றோரை மறப்பதை போன்றது. குலதெய்வ வழிபாட்டை மறப்பது, பெற்ற தாயை பட்டினி போடுவதற்குச் சமம். குலதெய்வ வழிபாட்டினால் தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுகிறது. கல்வி, திருமணம் அமைவது. தொழில் விருத்தி கிடைப்பது. குழந்தை வரம் பெறுவது முதலிய பயன்கள் பெறலாம்.

குலதெய்வ வழிபாடு இல்லாமல் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்தால் அவற்றின் பலன்கள் கிடைக்காது. குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில், எவ்வளவு பெரிய மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது. குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால், நவக்கிரகங்களும் துணை நிற்கும்.

துன்பமான நேரத்தில் நம் தாயை போல காப்பது குலதெய்வம் ஆகும்' நாள் செய்யாததை கோள் செய்யும், கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும். குலதெய்வம் சாபமிடாது. அந்த குலத்தை சார்ந்த நீங்கள் சரியாக வழிபடவில்லையே என்று மனது வருத்தப்படும். அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விசயங்கள் தள்ளி போகும். ஆகவே எல்லோரும் வராது குலதெய்வ வழிபாட்டை செய்து சந்தோசமாய் வாழலாம்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி, ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் நான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்துவிடும். குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனை கண்ட பனி போல் விலகி விடும்.

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். குலதெய்வ வழிபாடு என்பது இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடு என்பதினால் தான் குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்படும் அது ஜென்மங்களுக்கு தண்டனை கிடைக்கிறது. நாம் நம் குல தெய்வத்தை வழிபடும் போது நமக்கு வரும் வினைகள் இன்னல்கள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது

உங்கள் வீட்டிலேயே குல தெய்வ படத்தை அலங்கரித்து பாரம்பரிய வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபாடு செய்யுங்கள். உங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். நீங்கள் ஒரு வேளை குலதெய்ல வழிபாட்டை மறந்து இருந்தால் முதலில் மீண்டும் தொடங்குங்கள், வேறு எந்த தெய்வமும் அதற்கு ஈடு இல்லை.

Updated On: 23 Nov 2022 8:04 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...