/* */

Kanni Rasi Palan 2023-கன்னிராசியினருக்கு இந்த ஆண்டு திருமணம் உறுதி..!

கன்னி ராசிக்கு இந்த 2023ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.

HIGHLIGHTS

Kanni Rasi Palan 2023-கன்னிராசியினருக்கு இந்த ஆண்டு திருமணம் உறுதி..!
X

Kanni Rasi Palan 2023-கன்னி ராசிப்பலன்2023 (கோப்பு படம்)

Kanni Rasi Palan 2023

2023ம் ஆண்டின் கன்னி ராசியினருக்கான பொதுப்பலன்:

2023ம் ஆண்டு உங்களுக்கு சாதகமான ஆண்டாக இருக்கலாம். நீங்கள் எல்லாவற்றிலும் நேர்த்தியாக இருக்க வேண்டும். தடுமாறும் இரட்டை எண்ணங்களைத் தவிர்த்துவிட்டு, உங்கள் செயல்களில் திறம்பட செயல்படுங்கள். பணிகளை குறித்த நேரத்தில் முடித்து பாராட்டு பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசையாக இருந்த நிலையான சொத்தை நீங்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். இந்த காலகட்டத்தில் நீங்கள் திடீர் பயணங்கள் மேற்கொள்ளவேண்டி வரும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒன்று கூடுவதற்கு இது ஒரு நல்ல நேரம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

Kanni Rasi Palan 2023

காதல் மற்றும் குடும்ப உறவு:

நீண்ட நாட்களாக உங்களுடன் நட்பில் இருந்த அல்லது தெரிந்த ஒருவருடன் காதல் ஏற்படலாம். உங்கள் உள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் துணையின் கவனத்தை ஈர்த்து இல்லற வாழ்வில் புதிய உற்சாகத்தைத் தொடங்குவதற்கான நேரம் இது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை செய்யுங்கள்.

Kanni Rasi Palan 2023

நிதி நிலைமை :

இந்த ஆண்டு உங்கள் நிதிநிலை ஒரு சுமாரான காலமாக மட்டுமே இருக்கலாம். நீண்ட கால முதலீடுகள் மூலம் பணம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் ஒரு நீண்ட பயணத்தைத் திட்டமூடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த பயணத்தால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களின் போது புதியவர்கள் நட்பாகும் சூழல் ஏற்படும். அவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் நிதி விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் நிதிநிலைமை மேம்பட : சூரியன் பூஜை செய்ததது பலன் அளிக்கும்

Kanni Rasi Palan 2023

உத்யோகம்:

உத்யோகம் புருஷ லட்சணம் என்பார்கள். ஆனால் உங்கள் தொழிலுக்கு இந்த ஆண்டு ஒரு சாதாரண காலமாகத்தான் அமையும். மெதுவான முன்னேற்றம் மட்டுமே காணப்படும். சில வேலைகளை நீங்கள் தள்ளிப் போடலாம். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

உங்கள் வேலையை மிகுந்த கவனத்துடன் முடிக்க வேண்டும். வேலை தொடர்பான நடவடிக்கைகள் சுமூகமாக முடியும். உங்கள் திறமைகளை நீங்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். மேலும் உங்கள் வேலையை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டும்.

உத்தியோகத்தில் மேன்மை பெற : புதன் பூஜை செய்வது நல்லது

Kanni Rasi Palan 2023

ஆரோக்யம்:

ஆரோக்யத்தைப் பேண உங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். இரத்த அழுத்த பிரச்னைகள் ஏற்படலாம். நீங்கள் தோல் மாசுபாட்டால் அவதியுற நேரலாம். எனவே சரியான கவனிப்பு எடுக்கப்பட வேண்டும். உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவேண்டிய தருணம் இது.

உங்கள் ஆரோக்யம் மேம்பட : வைத்தியநாத பூஜை செய்வது சிறப்பாகும்.

Kanni Rasi Palan 2023

மாணவர்கள்:

இந்த ஆண்டு, நீங்கள் விரும்பியபடி தேர்வுகளில் வெற்றி பெறலாம். உங்கள் ஆசிரியர்களும் பெற்றோரும் உங்களைப் பற்றி பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் பேசுவார்கள். அதிக நம்பிக்கையுடன், உயர் படிப்பைத் தொடங்குவீர்கள். உங்கள் தகவல்தொடர்புகளை நீங்கள் பெரிதும் மேம்படுத்தலாம். கலாசார நடவடிக்கைகளில் உங்கள் பங்கேற்பு உங்களுக்கு அங்கீகாரத்தை அளிக்கும்.

கல்வியில் சிறந்து விளங்க : சரஸ்வதியை வணங்குங்கள்.

சுப மாதங்கள் : பிப்ரவரி, மே, ஜூன், ஜூலை ஆகஸ்ட் நவம்பர் மற்றும் டிசம்பர்

அசுப மாதங்கள் : ஜனவரி, மார்ச், ஏப்ரல், செப்டம்பர், மற்றும் அக்டோபர்.

Kanni Rasi Palan 2023

பரிகாரம்

  • குடும்ப உறுப்பினர்களிடம் அன்பாக இருங்கள்
  • உறவினர்களிடம் சுமுக உறவு மேற்கொள்ள முயலுங்கள்
  • அக்கம் பக்கத்தினருடன் ஒத்துழைப்புடன் இருங்கள்
  • ஆலயத்திற்கு நெய், கற்பூரம் தயிர் போன்றவற்றை வழங்குங்கள்
Updated On: 8 Oct 2023 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...