/* */

எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஐகோர்ட்டு திடீர் தடை

தேவர் சிலைக்கு அணிவிக்கும் தங்க கவசத்தை பெற எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஐகோர்ட்டு திடீர் தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஐகோர்ட்டு திடீர் தடை
X
  எடப்பாடி பழனிசாமி.             ஓ.பன்னீர்செல்வம்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் நினைவாலயம் உள்ளது. அங்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவர் சிலையில் அணிவிக்க அ.தி.மு.க. சார்பில் 2014-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசம் ஒன்றை வழங்கினார். ஆண்டுதோறும் அக்டோபர் 30-ல் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியின் போது தேவர் சிலைக்கு இந்த தங்க கவசம் அணிவிக்கப்படும். தேவர் ஜெயந்தி முடிந்ததும் அந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளை லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும். அ.தி.மு.க. மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரில் இந்த லாக்கர் உள்ளது. தேவர் ஜெயந்தியின் போது அணிவிக்க இந்த தங்கக் கவசத்தை அ.தி.மு.க.பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலய பொறுப்பாளர் சேர்ந்து கையெழுத்திட்டு வங்கி லாக்கரில் இருந்து பெற்று செல்வது நடைமுறையில் வழக்கமாக உள்ளது.

இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழா வருகிற 30ந்தேதி நடைபெறுகிறது. தற்போது அ.தி.மு.க. பிளவு பட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்படுகிறார்கள்.அதனால் தேவர் தங்க கவசத்தை வங்கியில் இருந்து யார் பெறுவது என்பது தொடர்பாக அ.தி.மு.க. இருஅணிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த தங்க கவசத்தை நாங்கள் பெற்று கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அ.தி.மு.க.பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, தங்க கவசத்தை மனுதாரர் தரப்பிடம் கொடுக்கக் கூடாது. வழக்கம் போல எங்களிடம் தான் வழங்க வேண்டும் என்றார். இதேபோல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிட பொறுப்பாளர் தரப்பிலும், வங்கி தரப்பிலும் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவிற்கு கட்டுப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அதில், "அ.தி.மு.க. உள் கட்சி பிரச்சனையில் கோர்ட்டு தலையிடாது. ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி வங்கியில் இருந்து தங்க கவசத்தை எடுத்துச்சென்று தேவர் சிலைக்கு அணிவிக்க வேண்டும். தங்க கவசம் அணிவிக்கப்பட்ட பின் அதை மீண்டும் வங்கியில் ஒப்படைக்கவும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. தங்க கவசத்திற்கு ராமநாதபுரம் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த ஆண்டுக்கு மட்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் தேவர் சிலைக்கு அணிவிக்கும் தங்க கவசத்தை பெற எடப்பாடிபழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு கோர்ட்டு தடைவிதித்துள்ளது. இதனால் இரு தரப்பு அ.தி.மு.க.வினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Updated On: 28 Oct 2022 5:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....