/* */

வாக்குப்பதிவு சதவீதம் குறைவால் மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவால் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியில் உள்ளார்.

HIGHLIGHTS

வாக்குப்பதிவு சதவீதம் குறைவால் மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்
X

முதல்வர் ஸ்டாலின்.

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து இருப்பது முதல்வர் ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை 143 கோடியை 90 லட்சத்தை கடந்து உலகிலேயே முதலிடம் வகிக்கிறது. இதில் 18 வயதை கடந்தவர்கள் 96 கோடியே 88 லட்சம் பேர். இவர்கள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு வாக்காளர்கள் இல்லாததால் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக இந்திய நாடாளுமன்ற தேர்தல் கருதப்படுகிறது.

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் நடத்த முடியாது என்பதால் ஏழு கட்டங்களாக பிரித்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை 1951 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தல்களில் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் தான் அதிகபட்சமாக 76.56 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் தங்கம் விலை போல வாக்கு பதிவு சதவீதத்தில் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும் புதிய உச்சம் தொடவில்லை. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூட 71.90% வாக்குகள் தான் பதிவாகின. இந்த நிலையில் தற்போது நடைபெற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முதலில் 72.9% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. அதை வைத்து பார்த்த போது கடந்த தேர்தலை விட கூடுதலாக வாக்குப்பதிவு நடந்ததாக சற்று ஆறுதல் கொல்லப்பட்டது.ஆனால் சற்று நேரத்திலேயே 69.46 சதவீதம் பேர்தான் ஓட்டு போட்டதாக அறிவிக்கப்பட்டது.

புதிய அறிவிப்பின் புள்ளி விவரத்தை வைத்து பார்க்கும்போது கடந்த தேர்தலை விட வாக்கு பதிவு சதவீதம் குறைந்து போனதை அறிய முடிந்தது. நேற்று தேர்தல் ஆணையத்தால் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அதில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. 100 சதவீத வாக்கு பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் மக்கள் மத்தியில் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு பலன் கிடைக்காமல் போய்விட்டது. நாட்டில் கல்வி அறிவு அதிகரித்துக் கொண்டு இருக்கும் அந்த நேரத்தில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு குறைந்து போனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக இந்த தேர்தலில் நிறைய பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை என்று குற்றச்சாட்டு நிலவியது. இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது சில ஆண்டுகளாக வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணி நடந்தது. இரண்டிலும் முகவரி வெவ்வேறாக இருந்து தொகுதியும் மாறுபடும் பட்சத்தில் தன்னிச்சையாகவே அது ரத்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு தரப்பு வாக்காளர்களுக்கு வழக்கமான தேர்தல் நேரத்திற்கான கவனிப்பு இந்த தேர்தலில் கிடைக்காமல் போனதும் ஓட்டு போடும் ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை என்று தெரிகிறது. பூத் சிலிப் கிடைக்காதவர்கள் பலர் எந்த வாக்கு சவடியில் சென்று ஓட்டு போடுவது என்று தெரியாமலேயே வாக்களிக்காமல் சென்று விட்டார்கள்.

நடப்பாட்டில் நாட்டில் 4கோடி 90 லட்சம் பேர் 18 வயதை கடந்தும் அதில் ஒரு கோடியே 80 லட்சம் பேர் தான் வாக்காளர் பட்டியில் தங்களை இணைத்து இருக்கிறார்கள்.

எது எப்படியோ தமிழகத்தில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் என்பது குறைந்திருக்கிறது. பொதுவாக வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து இருந்தால் அது மக்கள் ஆளுங்கட்சியின் மீது உள்ள கோபத்தில் அதிகப்படியாக வந்து வாக்கை செலுத்தி இருப்பார்கள் என்று கூறப்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து இருப்பது தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவிற்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது .வாக்குப்பதிவி சதவீதம் குறைந்து இருப்பதால் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் முதல் ஸ்டாலின் மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Updated On: 21 April 2024 1:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!