/* */

பாரதிய ஜனதாவிற்கு 150 இடங்கள் தான் கிடைக்கும்: ராகுல் காந்தி கணிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவிற்கு 150 இடங்கள் தான் கிடைக்கும் என ராகுல் காந்தி கணித்து உள்ளார்.

HIGHLIGHTS

பாரதிய ஜனதாவிற்கு 150 இடங்கள் தான் கிடைக்கும்: ராகுல் காந்தி கணிப்பு
X

பிரதமர் மோடி -ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எத்தனை இடம் கிடைக்கும்? என ராகுல் காந்தி கணித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவதும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பீகாரின் பகல்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அப்போது அவர் பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கடுமையாக தாக்கி பேசினார். அவர் தனது உரையில் கூறியதாவது:-

இந்திய அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க சதி செய்யும் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் மற்றும் சில கோடீஸ்வரர்களுக்கு எதிராக இண்டியா கூட்டணி பலமாக போராடுகிறது. அரசியல் சாசனத்தின் மூலம் தலித்துகள் ,ஏழைகள் ,ஆதிவாசிகள் ஏராளமான வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டால் இந்த வசதிகள் அனைத்தும் ஒழிந்து விடும். இதை உணர்ந்துதான் நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி போராடி வருகிறது.

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் 70 சதவீதம் மக்களின் வருமானம் வெறும் 100 சதவீதம் தான். அதே நேரம் மோடியின் பத்தாண்டுகளாக ஆட்சியில் கார்ப்பரேட் ஜாம்பவான்களான அம்பானி மற்றும் அதானிக்கு முழு பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் துறைமுகங்கள் சூரிய மின்சக்தி ,சுரங்கங்கள், எரிசக்தி துறை, பாதுகாப்பு துறைகள் அதானிக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசத்தின் நிதியை 10 முதல் 13 முதலாளிகளின் கைகளில் ஒப்படைப்பதற்காக மக்களின் கவனத்தை புத்திசாலித்தனமாக திசை திருப்பும் வகையில் சிறு வணிகர்கள் போராடி பதற்றத்தில் இருந்து வருகிறார்கள்.

நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா 400க்கு அதிகமான இடங்களை பிடிக்கும் என அந்த கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் பாரதிய ஜனதா 150 இடங்களை பிடிப்பதே கடினம். அதற்கு மேல் நிச்சயம் அவர்களுக்கு கிடைக்காது. மோடி அரசு 10 முதல் 15 தொழிலதிபர்களுக்கு கொடுத்த அதே பணத்தை நாட்டின் ஏழைகளுக்கு இண்டியா கூட்டணி வழங்கும் 20 முதல் 25 பேரின் 16 லட்சம் கோடி அளவிலான கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளார். இது காங்கிரஸ் தள்ளுபடி செய்த விவசாயிகளின் கண்ணை விட 25 மடங்கு அதிகம்.

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெறுவார். அவரது வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ. 8500 நேரடியாக செலுத்தப்படும். இதற்காக நாடு முழுவதும் ஏழை குடும்பங்களின் பட்டியலை காங்கிரஸ் தயாரிக்கும். இந்தியாவை வேலையில்லா திண்டாட்டத்தின் மையமாக மோடி மாற்றிவிட்டார் ஆனால் இந்தியா கூட்டணி ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். பட்டதாரி மற்றும் டிப்ளமோ பெற்ற இளைஞர்களுக்கு 8,500 மாதம் தரும் உதவி தொகையில் ஒரு வருட பயிற்சிக்கான வாய்ப்பு வழங்கப்படும்.

முதல் ஆண்டில் திருப்திகரமான செயல் திறன் உள்ளவர்களுக்கு தனியார் அல்லது பொது அல்லது அரசு துறையில் நிரந்தர வேலைகள் வழங்கப்படும். இந்த திட்டம் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை திறனை வழங்கும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Updated On: 21 April 2024 1:28 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!