/* */

கேரளாவில் பாரதிய ஜனதா- கம்யூனிஸ்டு இடையே ரகசிய உறவு: ராகுல் குற்றச்சாட்டு

கேரளாவில் பாரதிய ஜனதா- கம்யூனிஸ்டு இடையே ரகசிய உறவு இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

HIGHLIGHTS

கேரளாவில் பாரதிய ஜனதா- கம்யூனிஸ்டு இடையே ரகசிய உறவு: ராகுல் குற்றச்சாட்டு
X

ராகுல் காந்தி.

நாடு முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான இண்டியா கூட்டணியில் காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கம்யூனிஸ்டுகள் அங்கும் வகிக்கின்றன. ஆனால் கேரளாவில் மட்டும் அங்கு ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான எல்டிஎப் கூட்டணி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை எதிர்த்து போட்டியிடுகிறது.

கேரளாவில் மொத்தம் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி, கம்யூனிஸ்டுகள் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி போட்டி என மும்முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆனிராஜாவை எதிர்த்து போட்டியிடுவதை கம்யூனிஸ்டுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

அதே நேரம் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பாஜகவுடன் ரகசிய கூட்டணி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. கேரளாவில் காங்கிரஸ் -மார்க்சிஸ்ட் இடையிலான வார்த்தை போர் புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில் கண்ணூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி அமலாக்க துறையின் விசாரணையில் இருக்கும் முதல்வர்கள் இப்போது சிறையில் உள்ளனர். கேரள முதல்வர் மட்டும் இதுவரை கைதாகாமல் இருப்பது எப்படி? நாம் 24 மணி நேரமும் பாஜகவை தாக்குகுகிறேன். கேரள முதல்வரோ 24 மணி நேரமும் என்னை தாக்குகிறார். இது சற்று குழப்பமாக இருக்கிறது. பினராயி விஜயன் கருத்தியல் ரீதியாக பாஜக வை எதிர்த்து போராடுவதாக கூறுகிறார். ஆனால் பாஜகவினரோ என்னை மட்டுமே தாக்குகின்றனர்.பினராயி விஜயனை எதிர்ப்பதில்லை கேரள மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.

ராகுலின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்வினை ஆற்றிய பினராயி விஜயன் உங்கள் பாட்டி இந்திரா எமர்ஜென்சி அறிவித்த போது அதை எதிர்த்ததால் நாங்கள் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தோம். சிறைக்கு போவதற்கு நாங்கள் ஒருபோதும் பயந்ததில்லை. ஆனால் காங்கிரசார்தான் சிறைக்குச் செல்ல பயப்படுகின்றனர். சிறைக்குச் செல்ல பயந்து தான் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் பாஜகவுக்கு தாவினார் என ராகுலே கூறி உள்ளார்.ராகுல் அவர்களே உங்களுக்கு ஒரு பழைய பெயர் உண்டு. அந்த நிலையில் இருந்து இன்னமும் முன்னேறாமல் நீங்கள் இன்னும் அதே சூழலில் இருக்கும் நிலை கூடாது என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ராகுலை ஒரு காலத்தில் அமுல் பேபி என்று பெயரிட்டு அழைத்தார். அந்த பெயரை பழைய பெயர் என்று சொல்லி பினராயி விஜயன் விமர்சித்து இருப்பது காங்கிரஸ் கட்சியினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பினராயி விஜயனின் அமுல் பேபி விமர்சனத்தை கண்டித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா பிரதமர் நரேந்திர மோடியை மகிழ்விப்பதற்காக பினராயி விஜயன் மிகவும் தரம் தாழ்ந்து நிற்கிறார் என்று விமர்சித்துள்ளார். இப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- காங்கிரஸ் தலைவர்களின் நேரடி தாக்குதல்கள் தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் கூட காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் சேர்ந்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் தலைவர்களும்,கம்யூனிஸ்டு தலைவர்களும் ஒருவருக்கொருவர் வாரத்தை போரில் ஈடுபட்டு வருவது பாரதீய ஜனதா கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 21 April 2024 1:52 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!