/* */

இனிமேல், கள்ள ஓட்டு போட முடியாது: வாக்காளர் ஐ.டி.,யுடன் ஆதார் இணைக்க ஏற்பாடு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சட்ட திருத்தம் அமலானது. இதனால் இனிமேல் அரசியல் கட்சியினர் கள்ள ஓட்டு போடுவது நடக்காது.

HIGHLIGHTS

இனிமேல், கள்ள ஓட்டு போட முடியாது: வாக்காளர் ஐ.டி.,யுடன் ஆதார் இணைக்க ஏற்பாடு
X

வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் சட்ட திருத்தம் நிறைவேற்றியது. இதன் மூலம் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவு செய்வது தடுக்கப்படும். கள்ள ஓட்டு போடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதுதவிர 18 வயது நிரம்பியவுடனே வாக்காளராக பதிவு செய்யும் வகையில் ஆண்டுக்கு 4 கட்-ஆப் தேதிகள் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் தேர்தல் சட்டத்தில் பாலின சமத்துவத்தை பேணும்வகையில் மனைவி என்ற வார்த்தை வாழ்க்கைத்துணை என குறிப்பிட்டு திருத்தப்படுகிறது. இதன் மூலம் தொலைதூர பகுதிகள், வெளிநாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கைத்துணை வாக்களிக்க வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தம் அமலில் வந்துள்ளது. இது தொடர்பாக 4 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளதாக கிரண் ரெஜிஜூ, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 18 Jun 2022 8:09 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்