/* */

‘பளிச்’சிடும் முக அழகுக்கு இனிமேல் ‘உப்டான்’ யூஸ் பண்ணுங்க...!

Facial Meaning in Tamil - இனி பியூட்டி பார்லர்களை தேடி நீங்கள் செல்ல வேண்டியதில்லை. வீட்டிலேயே தயாரித்து ‘உப்டான்’ பயன்படுத்துங்கள். உங்கள் முகம் மற்றும் சரும அழகில், பளபளப்பில் மற்றவர்கள் அசந்து போவார்கள்.

HIGHLIGHTS

‘பளிச்’சிடும் முக அழகுக்கு இனிமேல் ‘உப்டான்’ யூஸ் பண்ணுங்க...!
X

 ubtan meaning in tamil- எந்தவிதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத இயற்கை கலவையான ‘உப்டான்’ பயன்படுத்தினால், உங்கள் முக அழகு இனி மிளிரும். ( கோப்பு படம்) 

Facial Meaning in Tamil - கரும்புள்ளிகள், மற்றும் சீரற்ற சரும நிற பிரச்னைகள் பெண்களில் பெரும்பாலோனோருக்கு ஏற்படுகிறது. இதனை எல்லா நேரத்திலும் மேக்கப் போட்டு மறைக்கவும் முடியாது.மார்டன் யுகத்தில் திருமணத்திற்கு பெண்ணை தயார் செய்ய பேஷியல், பிளீச், கிளீனப், த்ரெட்டிங், மேக்கப் என பல விஷயங்கள் வந்துவிட்டன. ஏனென்றால், மண நாளன்று பெண் மணப்பந்தலில் தேவதையாய் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக தான்.


ஆனால், நம் பாட்டி மற்றும் அம்மாக்கள் காலத்தில் எல்லாம் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உப்டானை முகத்தில் பூசுவார்கள். இதை ஒரு நிகழ்ச்சியாகவே செய்து வருகின்றனர். பெரும்பாலும், வீட்டில் இருக்கும் மஞ்சள், மூலிகைகள், மசாலாப் பொருட்கள், கடலை மாவு மற்றும் கொட்டைகள் போன்ற பொருட்களை பாரம்பரிய முறைப்படி நன்றாக அரைத்து, அந்த கலவையை முகத்தில் பூசுவார்கள்.

இதனால் திருமண பெண்ணின் முகம் சந்திரனைப் போல் பளபளப்பாக ஜொலிக்கும். உப்டான் 6,000 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுர்வேத முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை முறையில் சருமத்தை சரி செய்யும் சிகிச்சை முறையாக இந்த உப்டான் சொல்லப்படுகிறது. அதனால் தான் உப்டானை நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற வாழ்வின் மிக முக்கிய நாட்களில் முகம் மற்றும் சரும பொலிவோடு ஒளிர பயன்படுத்துகின்றனர்.


ரசாயன கலப்பு இல்லை

கெமில்களை கொண்ட கிரீம்கள் மற்றும் அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்திற்கு நீண்ட கால பாதிப்புகள் மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஒரு சில சந்தர்ப்பங்களில், தயாரிப்புகள் உடனடி பளபளப்பைக் கொடுப்பதாக தோன்றும், ஆனால் அது நீண்ட காலத்திற்கு சரும பிரச்சனைக்கு வழிவகுக்கும். உப்டானில் இயற்கையான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்தலாம்.


கரும்புள்ளிகள், நிறமாறுபாட்டிற்கு ‘குட்பை’

கரும்புள்ளிகள், மற்றும் சீரற்ற சரும நிற பிரச்சனைகள் பெண்களில் ஏற்படுகிறது. இதனை அகற்ற வேண்டும் என்றால், அதன் மூலக்காரணத்தை சரி செய்யக்கூடிய உப்டானை பயன்படுத்த வேண்டும். இயற்கையாகவே சருமத்தில் உள்ள கறைகளை நீக்க உப்டான் உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உப்டானை மெதுவாக முகத்தில் தேய்த்து, அது காய்ந்த பிறகு நீரால் கழுவி முகத்தை சுத்தப்படுத்திக் கொள்ளவும். இதனை அடிக்கடி செய்வதன் மூலம் உங்கள் சருமத்தில் உள்ள சீரற்ற நிறம் மற்றும் கருமைகள் மறைவதை கண்கூடாக காணலாம்.

எக்ஸ்போலியேட்டிங் நன்மைகள்

ஸ்கின் எக்ஸ்போலியேட்டிங் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் பலமுறை பார்லருக்கு சென்று, சில ஆயிரங்களை பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதுவே உப்டான் பயன்படுத்தினால் வீட்டிலேயே ஹாயாக படுத்துக் கொண்டு, அழகான சருமத்தை பெற்றுவிடலாம். இது உங்கள் சரும தோலை உரிக்கவும், இறந்த செல்களை அகற்றவும் பயன்படுகிறது. மேலும், சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டி புதிய செல்களை உருவாக்க உதவுகிறது.


புதிய மற்றும் மென்மையான சருமம்

கடுமையான கோடை காலம் சருமத்தை வறண்டு போக செய்கிறது, இதனால் முதலில் பாதிக்கப்படுவது முகம்தான். இப்படிப்பட்ட நிலைமையை சமாளிக்க உப்டானில் ரோஜா இதழ்கள், குங்குமப்பூ அல்லது ஆரஞ்சு தோல்களைச் சேர்ப்பது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கவும், நீண்ட நேரம் மென்மையாகவும், மிருதுவாகவும் பராமரிக்க உதவுகிறது.

அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது

உங்கள் சருமம் எண்ணெய் சருமமா, சாதாரண சருமமா அல்லது சாதாரண மற்றும் எண்ணெய் சருமத்தின் கலவையா? என எதுவாக இருந்தாலும், உப்டான் அதற்கு ஏற்ற தீர்வுகளை தரக்கூடியது. சரும வகைகளுக்கு ஏற்ப பால், தண்ணீர் அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெய் சருமத்திற்கு பால் மற்றும் தண்ணீர் மற்றும் வறண்ட சருமத்திற்கு தேன் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தில் அதிசயம் நிகழ்வதை காண முடியும்.

உப்டான் என்பது மூலிகை மற்றும் அத்தியாவசிய இயற்கை எண்ணெய் கலந்த கலவை ஆகும். இதை உடலில் தேய்ப்பதன் மூலம், அது தோல் மற்றும் சருமங்களின் சிறந்த சுத்திகரிப்பானாக விளங்குகிறது. மாசு மற்றும் வேதியியல் பொருட்களால் தோல்கள் அடைந்த பாதிப்புகளிலிருந்து அதை மீட்டு எடுத்து, தோல் மற்றும் சருமங்களின் இழந்த வனப்பை திரும்பப் பெற உதவுகிறது.

இந்த உப்டான் சிகிச்சையை எல்லா காலங்களிலும் மேற்கொள்ளலாம். பக்க விளைவுகள் இதில் முற்றிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தேன் கலந்த பேஸ் மாஸ்க்

செம்பருத்தி – தேன் கலந்த பேஸ் மாஸ்க் பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்கள் முகத்தில் ஏற்படும் பழுப்பு வடுக்கள் போன்ற பாதிப்பை, சன் ஸ்கரீன் பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கலாம். இதில் உள்ள செம்பருத்தி, தேன் உள்ளிட்டவைகள், தோலுக்கு சிறந்த குளிர்ச்சி தன்மையை அளிப்பதோடு மட்டுமல்லாது, அதிக வெப்பத்தினால் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் பழுப்பு நிறத்திலான வடுக்களை தடுக்கிறது.

சருமங்களில் உள்ள இறந்த செல்களை அகற்றி, சருமத்திற்கேற்ற மிருதுத்தன்மையை அளிக்கிறது. இது தோலுக்கு தனியாக டோனையும் அளிக்கிறது. இந்த பேஸ் மாஸ்க்கில் உள்ள சந்தன பவுடர், சிறந்த ஆஸ்டிரின்ஜென்ட் ஆக செயல்படுகிறது. இந்த உப்டானை தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம், சருமத்தில் உள்ள துளைகள் இறுக்கமாக அடைபடுவதோடு மட்டுமல்லாது, சருமத்தில் உறுதித்தன்மை ஏற்பட்டு, இளமையான தோற்றத்தை அளிக்கிறது.


​முகப்பரு வடுக்களை தடுக்கிறது

உப்டானில் உள்ள ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள், சருமத்தில், பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கிறது. இதன்மூலம், சருமத்தில், முகப்பரு, புள்ளிகள் மற்றும் பருக்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

​முகத்தில் வளரும் முடிக்களை நீக்க

உப்டான் சிகிச்சையானது, மயிர்க்கால்களை பலவீனம் அடையச்செய்து, அதன் வளர்ச்சியை தடுக்கிறது. முகத்தில் இந்த பேஸ் மாஸ்க்கை தடவும்போது, அது முகத்தில் வளரும் முடிக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அதை நீக்க உதவுகிறது.

வயதான தோற்றத்தை தடுக்க

செம்பருத்தி மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்பட்ட பேஸ் மாஸ்க்கில் உள்ள மஞ்சள் பொடி மற்றும் சந்தனம், முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் முகத்தின் அழகை கெடுக்கும் கோடுகளை நீக்க உதவுகிறது. மஞ்சள் பொடியில் உள்ள ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி ஏஜிங் மற்றும் ஆன்டி ஆக்சிடேட்டிவ் பண்புகள், சருமம் இழந்த ஈரப்பதத்தை திரும்ப பெற்று தோலை வறட்சியில் இருந்து பாதுகாத்து எப்போதும் இளமையாக இருக்க உதவுகிறது.

​வீட்டிலேயே தயாரிக்கலாம்

மஞ்சள் பொடி, பருப்பு மாவு, சந்தனம், பன்னீர், சுத்தமான பால் உள்ளிட்டவைகள் இருந்தாலே, உப்டான் ரெசிபிகளை, நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். உப்டானில் உள்ள பல்வேறு ரெசிபிக்களையும், அவைகளை தயாரிக்கும் முறைகள் குறித்து விரிவாக காண்போம்.


​வறண்ட சருமத்திற்கான ஓட்ஸ்

ஒரு தேக்கரண்டி சந்தன பொடி, ஒரு தேக்கரண்டி ஓட்ஸ், 3 தேக்கரண்டி கடலை மாவை ஒரு கோப்பையில் கலந்து கொள்ளவும். அதனுடன் அரை தேக்கரண்டி வேப்பிலை பொடி, அரை தேக்கரண்டி பெருஞ்சீரக பொடி மற்றும் சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்க்கவும். நீரில் ஊறவைத்து அரைக்கப்பட்ட 7 பாதாம் கொட்டைகளை இதில் சேர்க்கவும்.

பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்ற பதத்திற்கு மாற்றிக் கொள்ளவும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள், பேஸ்ட் பதத்திற்கு மாற்ற பன்னீரை சேர்த்துக் கொள்ளலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள், பால் அல்லது தயிரை சேர்த்துக் கொள்ளலாம்.


எண்ணெய் சருமத்துக்கு சந்தனம்

ஒரு தேக்கரண்டி சந்தன பொடி, 2 தேக்கரண்டி கடலை மாவு, அரை தேக்கரண்டி மஞ்சள் பொடியை, 2 தேக்கரண்டி பால் சேர்த்து நன்கு கலக்கவும். இதை பேஸ்ட் பதத்திற்கு கலக்கிக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை, சருமம் முழுவதும் சீராக தடவிக் கொள்ளவும்.

சென்சிட்டிவ் சருமத்திற்காக பாதாம்

பாதாம் கொட்டைகளை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து பின் அதன் தோலை நீக்கி, காய வைத்து பாதாம் பவுடராக எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு கோப்பை கடலை மாவு, ஒரு தேக்கரண்டி வேப்பிலை பொடி, சிறிது மஞ்சள் பொடி, அரை தேக்கரண்டி பெருஞ்சீரக பொடி சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் பன்னீர் சேர்த்து பேஸ்ட் போன்ற பதத்திற்கு கலக்கவும். இந்த பேஸ்ட்டை, முகத்தில் சீராக தடவி வரவும். செம்பருத்தி, தேன் கலந்த பேஸ் மாஸ்க் உடன் இந்த இயற்கை பொருட்களை சேர்த்து தோல் மற்றும் சரும பராமரிப்பை பேணி காக்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 March 2024 9:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...