/* */

மின் இணைப்பில் பெயர் மாற்றம்.. ஆன்லைனில் செய்வது எப்படி?

ஆன்லைனில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா ? வாங்க தெரிந்துகொள்வோம்.

HIGHLIGHTS

மின் இணைப்பில் பெயர் மாற்றம்.. ஆன்லைனில் செய்வது எப்படி?
X

பைல் படம்

தமிழ்நாட்டில், ஆன்லைனில் உங்கள் மின் கட்டணத்தில் உங்கள் பெயரை மாற்றுவது என்பது ஒரு சில படிகள் மட்டுமே தேவைப்படும் விரைவான மற்றும் எளிதான செயலாகும். தமிழ்நாடு மின்சார வாரியம் அல்லது TNEB பெயர் பரிமாற்ற ஆன்லைன் நடைமுறை அனைத்தும் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளன. பெயர் மாற்றத்திற்கான சில எளிதான வழிமுறைகளை பார்ப்போம்..

ஆன்லைனில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா ?

பெயர் மாற்றத்திற்கான காரணங்களை பொறுத்து ஆவணங்களும், விண்ணப்பங்களும் மாறுபடும்.

விண்ணப்பிக்க : https://nsc.tnebltd.gov.in/nsconline/nametransfer.xhtml

பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள்:

  • விண்ணப்பதாரர் தங்கள் நுகர்வோர் எண்ணை பிராந்திய குறியீட்டுடன் உள்ளிட வேண்டும்.
  • நுகர்வோர் எண்ணை வெற்றிகரமாக உள்ளிடும்போது, பெயர் மாற்றத்திற்கான காரணத்தை பின்வரும் வகைகளில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.

எந்த காரணத்திற்காக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

1. ஒப்புதல் கடிதம் (Consent Letter) விற்பனை/பகிர்வு/செட்டில்மென்ட்/பரிசு காரணமாக

2. ஒப்புதல் கடிதம் இல்லாமல் (without Consent) விற்பனை/பகிர்வு/செட்டில்மென்ட்/பரிசு

3. மரணம்

  • வகையின் தேர்வின் அடிப்படையில், பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • உரிமையாளரின் வகை Joint Property தேர்ந்தெடுத்தால் ("Consent Letter from Co-owner) படிவம்-5 இல் இணை உரிமையாளரின் ஒப்புதல் கடிதத்தைப் பதிவேற்றவும்.

தேவையான ஆவணங்கள் :

1. Due To Sale/Partition/Settlement/Gift with Consent Letter

விற்பனை/பகிர்வு/செட்டில்மென்ட்/பரிசுக்கான ஒப்புதல் கடிதத்துடனும், கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பிக்கவும்.

Form 2 : https://nsc.tnebltd.gov.in/nsconline/linkpdf/form2.pdf

https://nsc.tnebltd.gov.in/nsconline/linkpdf/form4.pdf

2. Due To Sale/Partition/Settlement/Gift without Consent Letter:

பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Form: https://nsc.tnebltd.gov.in/nsconline/linkpdf/form4.pdf

3. மரணம் காரணமாக.

மரணம் காரணமாக பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க, பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட தேவையான ஆவணங்களை பின்வருமாறு பதிவேற்றவும்.

Form : https://nsc.tnebltd.gov.in/nsconline/linkpdf/form3.pdf

Form : https://nsc.tnebltd.gov.in/nsconline/linkpdf/form4.pdf

மேலே குறிப்பிட்ட மூன்று வழிமுறைக்கும் நீங்கள் கட்டாயம் கீழே உள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சொத்து வரி / ஏதேனும் ஒரு ஆவணம் (விற்பனை பத்திரம் / பகிர்வு பத்திரம் / பரிசு தீர்வு / ஒதுக்கீடு கடிதம் / கணினி பட்டா / அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரிமை / நீதிமன்ற தீர்ப்பு)

விணணப்பித்த பிறகு அதன் நிலையை தெரிந்த கொள்ள :

https://nsc.tnebltd.gov.in/nsconline/mobval.xhtml?apl=NT


மேலும் விவரங்களுக்கு:

https://nsc.tnebltd.gov.in/nsconline/guidetransfer.xhtml


ஆன்லைன் கட்டணங்கள்:



Updated On: 23 Oct 2023 7:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...