/* */

வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்வோம்..! வாழ்க்கை என்பது ஒருமுறைதானுங்க..!

Enjoy Your Life Quotes In Tamil-வாழ்க்கை என்பது நமக்கானது. அதை நாம்தான் வாழ்ந்து பார்க்கவேண்டும்.நமது வாழ்க்கையை பிறர் வாழ முடியாது. எப்படி வாழலாம் என்பதை முடிவுசெய்வதே நாம்தான்.

HIGHLIGHTS

Enjoy Your Life Quotes In Tamil
X

Enjoy Your Life Quotes In Tamil

Enjoy Your Life Quotes In Tamil-வாழ்க்கை பற்றிய மேற்கோள்கள் இங்கு தரப்பட்டுள்ளன. நமது வாசகர்கள் இதைப் படித்து வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதை அறியலாம். எப்படி வாழவேண்டும் என்றும் புரிந்துகொள்ளலாம்.

  • உறவுகள் தூக்கி எறிவதால் இரவுகள் உனக்கு விடியாமலா போய்விடும்..? அவர்கள் முன் உன் வளர்ச்சியால் அவர்கள் பெருமைப்படும் அளவில் வாழ்ந்து காட்டு..!
  • தேவை இல்லாத உறவுகளை வெட்டிவிடுவதில் தயக்கம் காட்டக்கூடாது. முற்றுப்புள்ளி இல்லையென்றால் வார்த்தைகள் கூட அழகு பெறாது. அதனால், வார்த்தையும், வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும்...!
  • நம் வாழ்க்கை நம் கையில் என்பதை எந்த ஆசிரியரும் வந்து நமக்கு பாடங்கள் நடத்த தேவையில்லை..நம் வாழ்க்கை நம் கையில் என்பதை புரிந்துகொள்ளாதவரை வாழ்க்கையில் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் காண முடியாது..!
  • வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட ஒரே ஒரு முடிவு போதுமானது..அந்த முடிவு நமக்கான வளச்சிக்கானதாக இருக்க வேண்டும்..வீழ்ச்சிக்கானதாக இல்லை..! வாழ்வது பல வருடங்கள். ஆனால் வாழ்க்கை மாற சில நொடிகளே போதுமானது..!
  • நம்மை நேசிக்க யாருமில்லாத போது, நமக்கான நேசர்கள் நம்மைத் தேடி வர வைப்பதே நம் வாழ்க்கைக்கான வெற்றி மகுடம்..! வாழ்க்கை நம்மை யோசிக்கவும் வைக்கவேண்டும்..!
  • வாழ்கை என்பது இரண்டு பகுதிகள் கொண்ட ஒரு புத்தகம்..! ஆமாம்..ஒன்று கடந்த அக்காலத்து நினைவுகள்..இன்னொன்று எதிர்காலத்து கனவுகள்..!
  • சகிப்புத்தன்மை கூட அளவுக்கு மீறினால் நாம் அடிமைத்தனத்துக்கு சாசனம் எழுதுவதாக பொருளாகும். சுயமரியாதையை விட்டுவிட்டு வாழ்வதல்ல வாழ்க்கை..!
  • கரையைத் தொட்டுச்செல்லும் அலைகள் கூட கொந்தளித்து எழுந்தால்..இருந்த சுவடுகளைக் கூட காணாமல் போகச் செய்துவிடும்..மானத்தோடு வாழ்வதே மேல்..!
  • பிறந்து விட்ட எல்லோருக்கும் வாழ்வதற்கான உரிமையுண்டு..இந்த ஒரு பிறவியைத் தவிர்த்து இனி பிறக்கப் போவதில்லை என்ற எண்ணம் எழுத்தால் வாழ்க்கையை வாழ்க்கையாக வாழப்பழகிக்கொள்வோம்..!
  • உயிர் வாழ்வது மட்டுமே வாழ்க்கையல்ல..காக்கையும் குருவியும் கூட வாழவே செய்கின்றன..ஆனால் அவை எப்படி வாழ்கின்றன என்பதை பார்க்கவேண்டும்..குருவி குருவியாக மட்டுமே வாழும்..! காக்கை காக்கையாக மட்டுமே வாழும்..அனால் மனிதன் மட்டுமே மனிதனாக வாழ மறுக்கிறான்..! எப்படி வாழ்வது என்பதை காலம் கற்றுத்தரும்...!
  • அடுத்தவர் உணர்வுகளை மதிப்பவன் மனிதன்..எல்லா உயிரினங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டவன் புனிதன்..நாம் புனிதனாக வாழவேண்டாம்..குறைந்தபட்ஷம் மனிதனாகவாவது வாழ்வோமே..மனித உணர்வுகளை மதித்து..!
  • தண்ணீரில் நீச்சல் அடித்துக்கற்றுக்கொள்வது கூட வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை எதிர்நீச்சல் போட கற்றுக் தரும் வாழ்க்கைப்பாடமாக இருக்கும்..!
  • தத்துவங்களைக் கற்றுக்கொண்டு தவறான வாழ்க்கை வாழ்வதைவிட, தத்துவமே படிக்காமல் மனிதனை மனிதனாக மதித்து வாழும் மனிதரே மேன்மைக்குரியவர்..!
  • வாழ்வதற்கு வழியில்லையென்றாலும் கூட அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் மௌனப்புன்னகை வீசும் மனிதர்கள் மத்தியில், எல்லாம் இருந்தும் இல்லையென்று கூச்சல் போடும் வீணர்களும் வாழத்தான் செய்கிறார்கள்..!
  • வாழ்க்கையைத் தொலைத்தவனுக்கே தேடுதலின் அருமை புரியும்..! உறவுகளை இழந்தவனுக்கே உறவுகளின் உன்னதம் தெரியும்..! அன்பை இழந்தவனுக்குத்தான் காதலின் மகத்துவம் புரியும்..! இறந்தவனுக்கு மட்டுமே வாழ்க்கையின் வலி தெரியும்..!
  • அடுத்தவருக்காக வாழ விரும்பி நமது வாழ்க்கையைத் தொலைத்துவிடக்கூடாது..! எது உன்னிடம் இருக்கிறதோ அதைக்கொண்டு வாழ்ந்து காட்டு..! வாழ்க்கை இனிமையாக இருக்கும்..! பிறர் வாழ்க்கை மற்றவர்களுக்காக நடிப்பாக மட்டுமே இருக்கும்..உண்மை வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்..!
  • பிறரை துன்புறுத்திக் கிடைக்கும் மகிழ்ச்சி நிலைக்காது..! பிறர் தொலைத்த பணம் கூட உன் நிரந்தர மகிழ்ச்சிக்கு வழிவகுக்காது..! காற்றில் கரையும் சூடம்போல பணம் கரைந்து காணாமல் போகும்..! நாம் நாமாக வாழ்வோம்..!
  • அன்பு கூட அளவுக்கு அதிகமானால்..தீமையைத்தான் தரும்..! நம் குழந்தைகளுக்கு அன்பை அளவோடு காட்டவேண்டும்..அன்பு கூடினால் பிள்ளைகள் கட்டுப்பாடில்லாதவர்களாகவே வளர்வார்கள்..! அன்பை அளந்துகொடுங்கள்..வாழ்க்கை நன்றாக இருக்கும்..!
  • நமக்குள் இருக்கும் 'நான்' என்பவன் தான், தன்னம்பிக்கை எனும் பெயர் பெறுகிறான். அந்த 'நான்' முடிவு செய்வதே நமது வாழ்க்கை..! அதுவே நம் வளர்ச்சிக்கானதா..? வீழ்ச்சிக்கானதா..? என்பதை தீர்மானிக்கும் அளவுகோல்..!
  • மரத்தின் இலைகள் உதிர்வது கூட தன்னை புதுப்பித்துக்கொள்ள இயற்கை அளித்த ஒரு வாய்ப்பு. நமக்கான வாய்ப்பு நமக்கு கிடைத்த வாழ்க்கை..! அதை ரசித்து வாழ்ந்துபார்..வாழ்க்கையின் சுவை தெரியும்..எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்து..நூறாண்டு வாழ்ந்த இன்பம் பெறுவாய்..!
  • பணிவு மரியாதையின் அடையாளம் என்பது உண்மையே..ஆனால் அது யாருக்கான மரியாதை என்பதைப்பொறுத்தே அந்த மரியாதையும் மரியாதை பெறுகிறது..! ஆணவக்காரனுக்கு செய்யும் மரியாதை அடிமைத்தனத்துக்கு வழி வகுக்கும்..! கற்றறிந்த நல்லோருக்கான மரியாதையே போற்றுதலுக்குரியது..!
  • உனக்கான நல்ல இயல்பினை பிறருக்காக மாற்றிக்கொள்ளக்கூடாது..அது உன் தாயே சொன்னாலும் கூட..! சூழலுக்கேற்ப குணத்தை மாற்றிக்கொள்வது பச்சோந்திக்கு வேண்டுமானால் பாதுகாப்பு..! நல்லவர்களுக்கு அது பாதுகாப்பற்றது...!
  • அடிக்கடி தவறு செய்துவிட்டு நமக்கான பாடம் என்று சொல்வது முட்டாள்தனத்துக்கு முகவுரை எழுதுவது போன்றது..! ஒருமுறை செய்த தவறு மீண்டும் வராமல் தடுக்கத்தெரிந்தவனே புத்திசாலிகளின் பள்ளிக்கூடம்..!
  • வாழ்வதற்கு கொஞ்சம் பணம் தேவை. ஆனால் பணமே வாழ்க்கையல்ல..! எப்படி வேண்டுமானாலும் பணத்தை சம்பாதிக்கலாம் என்று நினைப்பவன், சுயமரியாதையை தொலைத்தவன்..! இப்படித்தான் பணம் சம்பாதிக்கணும் என்று நினைப்பவன் மானஸ்த்தன்..!
  • தகுதி என்பது நமது எண்ணங்களால் உருவாவது..! எண்ணங்கள் செழுமையுறும்போது..வாழ்க்கை வசந்தமாகிறது..! எண்ணங்களில் தீய எண்ணங்கள் எழும்போது வாழ்க்கை பாலையாகிறது..!
  • வாழ்க்கையின் வறுமைகூட மனிதருக்கு பாடங்கள் கற்றுத்தரும் புத்தகம்..! வீழும்போது எழும் பாடம் குழந்தை பருவத்தில் நாம் கற்றுக்கொண்ட வித்தைகள்தானே..!
  • வரலாற்றில் வெற்றி பெற்றவனுக்கும் இடம் உண்டு. அதேபோல தோல்வி கண்டவனுக்கும் இடம் உண்டு. ஆனால் என்றுமே வேடிக்கை மனிதர்களுக்கு வரலாற்றில் இடம் கண்ட சரித்திரம் இல்லை.
  • வாழ்க்கையில் நடக்கும் துன்பங்கள் எல்லாம் எல்லோருக்கும் நிரந்தரம் இல்லை. அதை நிரந்தரமாக இல்லாமல் செய்வதே புத்திசாலிகள் செய்யும் ஆகச் சிறந்த செயல்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 10 April 2024 9:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...