/* */

சப்பாத்திக்கு குருமா..குருமா..! அட.. இது 2 இன் 1 குருமா..!

Chapathi Side Dish in Tamil-சப்பாத்திக்கு நீங்க எத்தனையோ குருமா செய்திருப்பீங்க. இது 2 இன் 1 குருமா. அட அப்படி என்ன ஸ்பெசல் என்று நினைக்கும் உங்களுக்கு மட்டுமே இது.

HIGHLIGHTS

Chapathi Side Dish in Tamil
X

Chapathi Side Dish in Tamil

Chapathi Side Dish in Tamil-சப்பாத்திக்கு இந்த குருமாவை செய்து பாருங்க. அப்படி ஒரு சுவை. இதை பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளுக்கு சாண்ட்விச் போலவும் செய்து கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அட ஆமாங்க, இந்த குருமாவை கெட்டியாக செய்துவிட்டால் சப்பாத்திக்கும் வைத்து மடக்கி டிபன் பாக்சுக்குள் வைத்துவிடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் :

பீன்ஸ், கேரட் சிறிதாக நறுக்கியது ஒரு கப், பச்சை பட்டாணி அரை கப், உருளைக்கிழங்கு 2, பச்சை நாட்டுக் கத்தரிக்காய் 3(கேரட், பீன்ஸ் போலவே சிறிய துண்டுகளாக நறுக்கியது), முட்டைகோஸ் பொடியாக நறுக்கியது அரை கப், சிறிதாக வெட்டிய சின்ன வெங்காயம் -10, கால்மூடி தேங்காய் விழுது, மஞ்சள் தூள் கால் டீ ஸ்பூன், மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி 2, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, கடுகு, கடலை எண்ணெய் 2 டீ ஸ்பூன், தேவையான அளவு உப்பு.

(பச்சை பட்டாணி என்று காய்ந்த பட்டாணிக்கு ஊறவைத்து, பச்சை கலர் பெயிண்ட் அடித்து விற்பதை வாங்கக் கூடாது. அவரை வடிவில் இருக்கும் பச்சை பட்டாணியை நேரடியாக வாங்குதல் நல்லது. உதிர்த்த பட்டாணியில் ஏமாற்று வேலை நடக்கிறது.)

செய்முறை :

கடலை எண்ணெயை கடாயில் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தை கொட்டி பொன் நிறமாக வதக்க வேண்டும். பின்னர் தக்காளியை போட்டு நன்றாக வதக்க, அது வெங்காயத்துடன் கலந்து கூழ்ம நிலைக்கு வரும்போது, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் வெட்டி வைத்துள்ள பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், பட்டாணி, கத்திரிக்காய் போன்றவைகளை கொட்டி எண்ணெயில் நன்றாக வதக்கவேண்டும். தேவைப்பட்டால் சிறிது கடலை எண்ணெய் சேர்த்து காய்கள் நன்றாக சுருண்டு வதங்கும் வரை வதக்க வேண்டும்.

இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம். பின்னர் மஞ்சள்தூள், மிளகாய் தூள், சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து நன்றா.......க ஒரு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவேண்டும். 'கொத..கொத' சப்தம் வரும்போது, கொத்தமல்லி தழையை தூவி இறக்கிவிடலாம்.

இந்த குருமா சப்பாத்திக்கு வித்தியாசமான சுவையைத் தரும். இதில் சேர்ந்துள்ள கத்திரிக்காய் ஒரு தனித்த சுவையை தரும்.

குழந்தைகளுக்கு..சாண்ட்விச்..

இந்த குருமாவை அப்படியே இன்னும் நன்றாக கொதிக்கவிட்டு கெட்டியானவுடன், அது கெட்டியான மசாலாவாக இருக்கும். அதன்மீது கொத்தமல்லி தழையை தூவி தனியாக ஒரு குழியான பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். நன்றாக ஆறியதும், ஒரு டேபிள் ஸ்பூனில் அந்த மசாலாவை எடுத்து சப்பாத்தி மீது வைத்து மடக்கலாம் அல்லது உருட்டி கொடுக்கலாம். சாண்ட்விச் ரெடி..! குழந்தைகள் போட்டி போட்டு சாப்பிடுவார்கள்.

இந்த குருமா அல்லது மசாலாவுக்கு முட்டை கோசுக்கு பதில் காலிபிளவர் பயன்படுத்தி செய்தால் இன்னும் சுவை அதிகமாக இருக்கும்.

நீங்களும் செய்து பாருங்க. பக்கத்து ரம்யா அக்கா, அவங்க குழந்தைக்கு செய்து கொடுக்க உங்களிடம் ஐடியா கேட்பாங்க.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 April 2024 5:30 AM GMT

Related News