/* */

புது வீடு கட்டி இருக்கீங்களா..? எப்படி கிரகப்பிரவேசம் செய்யணும்? தெரிஞ்சுக்கங்க..!

House Inauguration Meaning in Tamil-வீடு கட்டிவிட்டால் அந்த வீட்டுக்கு குடிபோவதற்கு முன்பாக சில சம்பிரதாய சடங்குகள் செய்வது நமது வழக்கம். அந்த நம்பிக்கையே பல நன்மைகளை நமக்கு அள்ளித்தரும்.

HIGHLIGHTS

புது வீடு கட்டி இருக்கீங்களா..? எப்படி கிரகப்பிரவேசம் செய்யணும்? தெரிஞ்சுக்கங்க..!
X

housewarming meaning in tamil-வீடு கிரகப்பிரவேசம் (கோப்பு படம்)

House Inauguration Meaning in Tamil

housewarming என்பது தமிழில் புதுமனை புகுவிழா என்பதாகும். வாழ்க்கையில் எல்லோரும் ஒருமுறை மட்டுமே வீடு கட்டுவார்கள். அந்த வீடு சிறப்பானதாக இருக்கவேண்டும். தலைமுறை அங்கு பெருகவேண்டும். செல்வங்கள் பெருகவேண்டும். மகிழ்ச்சியான, ஆரோக்யமான வாழ்க்கை வாழவேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்று.

அந்தக்காலத்திலேயே வீட்டைக்கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார் என்பார்கள், நம் முன்னோர்கள். ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு ஒன்று இருப்பது அவசியம். நமக்கு மட்டுமல்லாமல் நமது வாரிசுகளும் அந்த வீட்டில் மகிழ்ச்சியோடு சிறப்பாக வாழவேண்டும். ஆகவே, ஒரு புதிய வீடு கட்டி அந்த வீட்டில் தெய்வீகம் நிறைந்து இருக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புவதும் வழக்கமான ஒன்று. அதற்காகத்தான் கிரகப்பிரவேசம் செய்கிறார்கள். இந்த கிரகப்பிரவேசம் சம்பிரதாயப்படி எப்படி செய்யவேண்டும் என்று தெரிஞ்சிக்கலாம் வாங்க.

புதுமனை புகுவிழா

கிரகப்பிரவேசம் என்று கூறப்படும் புதுமனை புகுவிழாவை மாசி, வைகாசி, ஆவணி போன்ற மாதங்களில் செய்வது சிறப்பாகும். அனுபவம் வாய்ந்த ஜோதிடர் ஒருவரை அணுகி கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்த முகூர்த்த தேதியை முடிவுசெய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

ஒரு முகூர்த்த தினத்தில் மஞ்சளும்,பசுமையும் கலந்த உங்கள் வீட்டின் வண்ண கிரகப்பிரவேச அழைப்பிதழை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் குங்குமம்,வெற்றிலை,பாக்கு, மஞ்சள் ஆகியவற்றோடு சேர்த்து கொடுக்க வேண்டும்.


அதிகாலை ஹோமம்

பொதுவாக கிரகப்பிரவேச பூஜை மற்றும் ஹோமத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 என்ற நேரங்களிலும் செய்வதே சிறந்ததாகும். காலை 9 மணிக்குப் பிறகு நல்ல நேரமாகவே இருந்தாலும் கிரகப்பிரவேச சடங்குகள் மற்றும் ஹோமம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

அதிகாலை 4 மணிக்கு கிரகப்பிரவேச பூஜை செய்யப்படும் போது, அதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிரகப்பிரவேச சடங்குகளை எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் செய்ய வேண்டும். மிகுந்த ஆடம்பரமான கலாச்சார உடைகளை தவிர்த்து, வீட்டின் தலைவர்களான கணவன் – மனைவி பாரம்பரிய வேட்டி, சேலை போன்ற உடைகளை பூஜை நேரத்தில் அணிந்து கிரகப்பிரவேச பூஜை சடங்குகளை செய்ய வேண்டும்.

கோபுர தரிசனம்

வீடு கட்டியிருக்கும் பகுதியில் அருகே உள்ள ஏதேனும் ஒரு கோவிலின் கோபுர வாசலில் சாமிப்படம், அரிசி, உப்பு, பருப்பு, குடத்தில் நீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு தெய்வத் துதிகளைச் சொல்லியவாறு பூஜை முறைகளை செய்வதால் தெய்வங்களின் அனுக்கிரகம் உண்டாகும். வீட்டில் சகல செல்வங்களும் பெருகும்.

கோ பூஜை

புதிய வீட்டிற்குள் தெய்வீக விலங்கான கன்று ஈன்ற பசுவை அழைத்து வந்து கோ பூஜை செய்யும் போது வீட்டு உரிமையாளர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கு பொட்டு வைத்து, பசு ஈன்ற கன்றுக்கும் பொட்டு வைத்து, துணி, மாலை போன்றவைகளை சாற்றவேண்டும்.

அரிசி, வெல்லம் கலந்த கலவை மற்றும் அகத்திக் கீரையை பசுவுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும். பின்பு அன்றைய தினம் காலையில் வரும் சுப முகூர்த்த நேரம் முடிவதற்கு முன்பாக அடுப்பில் ஒரு புதிய பாத்திரத்திற்கு, பூ, சந்தனம், குங்குமம் வைத்து, பசும்பால் ஊற்றி காய்ச்ச வேண்டும்.

பால் பொங்கி வந்த பின் கைகூப்பி வணங்கி அதனை, சாமி படத்தின் முன்பாக வைத்து பூஜை பொருட்களுடன் நிவேதனம் செய்து ஆரத்திக் காட்டி வணங்க வேண்டும். இவ்வாறாக முறைப்படி கிரகப்பிரவேச சடங்கு செய்வதால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் என்றென்றும் நன்மையான பலன்களை பெறுவார்கள். மகிழ்ச்சி பெருகும். ஆரோக்ய வாழ்க்கை வாழ்வார்கள்.

இப்படி நம் முன்னோர்கள் ஒவ்வொரு சம்பிரதாய சடங்குகளிலும் ஒரு நெறிமுறைகளை வைத்துள்ளனர். அது ஏதாவது ஒரு முறையில் விஞ்ஞானப் பூர்வமான, நலம் பயக்கும் விஷயமாக இருக்கும். சம்பிரதாயங்களை பின்பற்றி நம் நலமோடு வாழ்வோமாக.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 March 2024 9:10 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா
  3. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  5. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  6. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  7. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  8. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  10. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!