/* */

தவிர்த்தலில் இருந்து தப்பிப்பது எப்படி? அட்டகாசமான வாசங்கள் இதோ உங்களுக்காக...

Ignoring Quotes in Tamil-நம் வாழ்க்கையில் ஒரு சில நேரங்களில் நாம் தவிர்க்கப்படுகிறோம்.அதேபோல் நாமும் ஒரு சிலவற்றை தவிர்த்துவிடுகிறோம். இதனால் பல நன்மைகள் உண்டு. அதற்கான வாசகங்கள் இதோ...

HIGHLIGHTS

Ignoring Quotes in Tamil
X

Ignoring Quotes in Tamil

Ignoring Quotes in Tamil

வாழ்க்கையில் நாம் எத்தனை சந்தர்ப்பங்களை சந்திக்கிறோம். நாம் சந்திப்பது அனைத்துமே வெற்றியில் முடிகிறதா? என்றால் அதற்கு பதில் இல்லை என்று தான் சொல்ல முடியும். நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.... ஒரு சில எதிர்பாராத விஷயங்கள் மட்டும் நடக்கும்.ஆனால் எதிர்பார்க்க கூடிய விஷயங்கள் இழுத்துக்கொண்டே போகும்.. இதுதாங்க வாழ்க்கை.

வாழ்க்கையின் அனுபவங்களில் நாம் எத்தனை விஷயங்களை தவிர்த்திருப்போம்.. சற்று நினைத்து பாருங்கள். ஒரு சில தவிர்த்தல் நமக்கு நல்லவனவற்றையாக இருக்கும். ஆனால் ஒரு சில தவிர்த்தல் என்பது இக்கட்டான விஷயத்தினால் தவிர்த்திருப்போம். அல்லது எதிர்கால பிரச்னைகளால் த விர்த்திருப்போம். எனவே தவிர்த்தல் என்பது யாருமே யோசிக்காமல் செய்யக்கூடிய காரியம் இல்லை. நன்கு யோசித்து முடிவெடுத்த பின்னர்தான் இதனை தவிர்க்கிறோம

ஒருசில விஷயங்கள் நாம் தவிர்த்து அது மற்றவர்கள் கைக்கு போன பிறகு அதில் வரும் பிரச்னைகளைக் கண்டு நாம் தவிர்த்ததுதான் சரி என்ற முடிவுக்கு வருவோம். அதுவே எதிர்வினையாகிவிட்டால் அதாவது வாங்கியவருக்கு பாசிடிவ் அறிகுறிகளைக் காணும்போது நாம் தவிர்த்திருக்க வேண்டாம் என நம் மனசு சொல்லும். அல்லது நம் குடும்பத்தில் யாராவது தவிர்க்க சொல்லியிருந்தால் நீதானே அப்ப அப்படி சொன்னே...இப்ப பார்த்தியா.. என கேள்வி கேட்போம்.

உண்மையில் சொல்லப்போனால் எந்தவொரு விஷயமானாலும் சரிங்க... நம் கையைவிட்டு அதுவா போகுதுன்னா என்னைப்பொறுத்தவரை விட்டுவிட வேண்டும். அதனை வலுக்கட்டாயமாக நாம் நிறுத்தும்போதுதான் நமக்கு பிரச்னைகள் வேறு ரூபத்தில் வந்து ஆட்டிப்படைக்கிறது. அதுவாக வந்தால் ஓகே. அதற்காக மெனக்கெடக்கூடாது என்பதுதான் நம் கொள்கை. எனவே ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பல தவிர்த்தல்களை நாம் செய்திருப்போம். இதில் ஏதாவது ஒருசில மட்டும் பாசிடிவ் ரிசல்ட் நாம் தவிர்த்த பின்னர் தந்திருக்கும். அதனைப்பற்றியெல்லாம் நாம் எந்த சூழ்நிலையிலும் கவலைப்படவே கூடாதுங்க... ஓடுகிற தண்ணீர் போல் போய்க்கொண்டேயிருக்க வேண்டும். குளம், குட்டையில் தேங்கும் நீர் போல் இருந்தால் நமக்கு நோய்தான் மிஞ்சுங்க... தவிர்த்தல் ஒரு சில நேரத்தில் நலம்... அதுவே ஒரு சில நேரத்தில் நலமல்ல... இதுதாங்க வாழ்க்கை..

சரி இதற்கான வாசகங்களைப் பார்ப்போம்...வாங்க...

நம்ம யாருக்கிட்ட அன்ப எதிர்பார்க்கிறோமோ அவங்கதான் நம்மல கஷ்டமும் படுத்துறாங்க.. அவாய்ட் பண்றாங்க..


தவிர்த்திடும் நிலை வரும் என்று தெரிந்திருந்தால் அப்போதே தவிர்த்திருப்பேன்.

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்... அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்...

அவ்வப்போது சோகமாக இருப்பது வலிக்காது

யோசிக்கும் முன்பே உன்னை நேசித்துவிட்டேன் இன்று யோசித்து கொண்டிருக்கிறேன்... ஏன் நேசித்தேன் என்றல்ல இன்னும் இன்னும் உன்னை எப்படி நேசிப்பதென்று?

திரும்பி பார்க் கவைக்கும் முகம் எல்லோருக்கும் இருக்கும்

ஆனால் திரும்ப நினைக்க வைக்கும்குஷம் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும்

எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல. என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதுதான் உண்மையான அன்பு..

உள்ளத்தில் இருக்கும் சோகத்தை மறைக்க என் உதடுகள் போடும் நாடகமே இந்த புன்னகை

மிகப்பெரிய வலி நான் உன்னுடன் பேச நினைக்கையில் பேச முடியாமல் இருப்பதே

என்ன நடந்தாலும் உன்னிடம் சொல்லியே பழகிவிட்டேன்

நீ போனதை யாரிடம் சொல்ல.


உன்னை தேவை இல்லைஎன்று வெறுத்தவருக்கு நீ எதை செய்தாலும்தவறாகவே தெரியும்.

விரும்பிய போதும் விரும்பினேன் என்பதை விட வெறுத்த போதும்விரும்பினேன் என்பதே உண்மை.

தவித்திடும் நிலை வரும்என்று தெரிந்திருந்தால்அப்போதே தவித்திருப்பேன்.

தேவைப்படும் போது பழகுவதும்தேவை முடிந்தவுடன் எடுத்தெறிவதும்இருக்கும் வரை தோல்விகளும்ஏமாற்றங்களும் மனித வாழ்வில்தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

உழைப்பவன் ஒதுக்கப்படுகிறான் நடிப்பவன் மதிக்கப்படுகிறான் ஏமாற்றுபவன் பாராட்டப்படுகிறான்.

பிறர் மீதான வீண் எதிர்பார்ப்புகளைகுறைத்து கொண்டாலே போதும்

எப்போதும் நிம்மதியாக இருக்கலாம்.

உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் நிலைப்பதில்லைஉன்னை புரிந்து கொண்ட எதுவும்

உன்னை விட்டு விலகுவதும் இல்லை

யாரிடமும் அதிக உரிமை எடுக்காதேசீக்கிரம் வெறுப்பாய் அதேபோல் யாருக்கும்

அதிக உரிமை கொடுக்காதே விரைவில் வெறுக்கப்படுவாய்.

உன்னை வெறுப்பவர்களைநினைத்து கவலை கொள்ளாதே அவர்களுக்கு உன் அன்பை

பெற தகுதி இல்லை எனநினைத்துக்கொள்.

தேடிப்போய் பேசுவது தவறில்லை தேடியே வராதவர்களிடம் நாமே பொய் பேசுவது தான் தவறு.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 March 2024 5:01 AM GMT

Related News