/* */

குஜராத் சட்டசபை தேர்தலில் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு

குஜராத் சட்டசபை தேர்தலில் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளது.

HIGHLIGHTS

குஜராத் சட்டசபை தேர்தலில் வீட்டில் இருந்தபடியே  வாக்களிக்க ஏற்பாடு
X

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் என்பது ஒரு திருவிழா போன்றது. அது சட்டமன்றத் தேர்தலானாலும் சரி, நாடாளுமன்ற தேர்தலானாலும் சரி. மக்கள் அதனை ஒரு திருவிழாவாகத்தான் பார்க்கிறார்கள். அதற்கு காரணம் ஓட்டு போடுவதற்கு என எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் படித்தவர்களுக்கு மட்டும்தான் ஓட்டுரிமை இருந்தது.அதற்கு முன்னதாக ஆண்களுக்கு மட்டும்தான் ஓட்டுரிமை இருந்தது. ஆனால் தற்போது அப்படி அல்ல 18 வயது பூர்த்தியானவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி படித்தாலும் சரி படிக்கவில்லை என்றாலும் சரி வாக்களித்து தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றலாம். ஆனாலும் நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் ஒரு தேர்தலில் கூட 100 சதவீதத்தை எட்டவில்லை. 100 ஏன் 90 சதவீதம் கூட இதுவரை வந்ததில்லை. அந்த அளவிற்கு தான் நமது நாட்டில் வாக்களிப்பதில் கடமை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இருக்கிறது.

அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் உள்ள சூழலில் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏனென்றால் இந்த தேர்தல் அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது.அதற்கு காரணம் தற்போது நமது நாட்டில் பிரதமராக இருக்கும் பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். பாரதிய ஜனதா கட்சியில் பிரதமருக்கு அடுத்து முக்கிய பொறுப்பில் உள்ள மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவும் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.இவை எல்லாவற்றிற்கும் மேலாக நீண்ட காலமாக குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி தான் ஆட்சியில் உள்ளது. ஏன் பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்து பணியாற்றி விட்டு தான் தற்போது பிரதமர் பதவியை அலங்கரித்து வருகிறார். ஆதலால் இந்த தேர்தலில் தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சி முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் தனது பங்கிற்கு வேலை செய்து வருகிறது. இவர்களுக்கு போட்டியாக டெல்லியில் இருந்து பஞ்சாபுக்கு கால் ஊன்றி ஆட்சியை பிடித்த அர்விந்த் கெஜ்ரிவாலும் குஜராத் மீது ஒரு கண் வைத்து அங்கு தனது இன்னொரு காலை ஊன்றுவதற்கு தயாராகி வருகிறார்.

அரசியல் ரீதியாக இவை ஒருபுறம் இருக்க தேர்தல் ஆணையம் குஜராத்தில் தேர்தல் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பணி செய்து வருகிறார்கள்.


குஜராத் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ளது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளுக்காக ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் உட்பட தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் குழுவினர் இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்குச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளுக்கு செல்ல முடியாத வாக்காளர்களின் வீடுகளுக்கு தேர்தல் அதிகாரிகள் வருகை தருவார்கள். அவர்கள் வாக்காளர்களிடம் நேரடியாக வாக்குகளை சேகரிப்பார்கள். இந்த முழுமையான வாக்குப்பதிவு முறை, வீடியோ பதிவு செய்யப்படும். மேலும், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் வாக்குப்பதிவின்போது அந்த வீட்டில் இருக்கலாம். இந்த வசதியைப் பெற விரும்புவோர், 12டி படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும்.

தபால் வாக்குச் சீட்டு வசதியைப் பெற பயன்படுத்தப்படும் அதே 12டி படிவம் தான் இந்த புதிய முறை வாக்கெடுப்பிற்கும் நிரப்பப்படுகிறது. இம்முறை சட்டசபை தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மீது கவனம் செலுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர்பட்டியல் அக்டோபர் 10ம் தேதிக்குள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்தெந்த வாக்களர்கள் இந்த வசதியை பெற அனுமதிக்கப்படும்? எந்தெந்த நேரத்தில் தேர்தல் அலுவலகர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு வருவார்கள் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.


இந்தியாவில் முன்னொரு காலத்தில் தேர்தல் நடைபெற்றதற்கும் தற்போது நடைபெறுவதற்கும் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டன.டி.என். சேஷன் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதற்கு முன்னதாக அரசியல் கட்சித் தலைவர்கள் விடிய விடிய தேர்தல் பிரச்சாரம் செய்து மக்களை கண்விழிக்க வைத்து கொடுமைப்படுத்தியதற்கு முடிவு கட்டினார் டி‌.என்.சேஷன். இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய கூடாது அப்படி பிரசாரம் செய்தால் பிரசாரம் செய்பவர் மீதும் வேட்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என ஒரு கடுமையான சட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி இப்போது தேர்தல் பிரச்சாரம் வரைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.


அதேபோல வாக்கு பதிவிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்துவிட்டன. ஓட்டு சீட்டு முறைக்கு குட்பை சொல்லிவிட்டு இப்போது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் முழுக்க முழுக்க மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் மூலம் தான் நடைபெறுகிறது. வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். அந்த அட்டை இல்லை என்றால் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம்.தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வயதான முதியவர்கள் மட்டும் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதன்படி முதியவர்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்ததும் வாக்குப்பதிவு அதிகாரிகள் அவர்களது வீட்டிற்கு ஓட்டு போட்டியை எடுத்து சென்று வாக்குகளை பதிவு செய்துவிட்டு வந்தார்கள். இப்போது நடைபெற உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் பெண்களும் வீட்டிலிருந்தே தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் காலங்களில் ஆன்லைன் மூலம் வாக்களிப்பதற்கான வசதியும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 28 Sep 2022 5:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  8. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  9. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  10. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி