/* */

பிரான்ஸ் நாட்டில் அமைக்க திருவள்ளுவர் சிலை தயார்

பிரான்ஸின் ஜெர்சி நகரில் நிறுவப்பட இருக்கும் வள்ளுவர் சிலையினை புதுச்சேரி சிற்பி வடிவமைத்துள்ளார்

HIGHLIGHTS

பிரான்ஸ் நாட்டில் அமைக்க திருவள்ளுவர் சிலை தயார்
X

திருவள்ளுவர் 

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பிரான்ஸ் வாழ் இந்தியர்களிடையே பேசும் போது, பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் தமிழகத்தின் தலைசிறந்த புலவர் திருவள்ளுவருக்கு சிலை வைக்கப்படும் என அறிவித்தார்.

திருவள்ளுவர் எழுதிய, ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்டதாய்’ என்ற திருக்குறளையும் சொல்லி, அதற்கு விளக்கமும் அளித்தார். சுமார் ஏழாயிரத்து அறுநூறு கிலோ எடைகொண்ட இந்த சிலை புதுச்சேரியில் தயாராகி விட்டது. அதாவது மோடி முதலில் அறிவித்து விட்டு பின் தகுதியுள்ள நாட்டில் தான் தகுதியான சிலை என மழுப்பவில்லை. சிலையினை தயார் செய்து விட்டுத் தான் அறிவிப்பினையே செய்திருக்கின்றார்.

பிரான்சில் நிறுவப்படவுள்ள திருவள்ளுவர் சிலை

அதாவது இந்த திட்டம் முன்பே செயல்படுத்தபட்டு சிலை எல்லாம் தயாராகி விட்டது. இப்போது அறிவித்தாகி விட்டது. இனி சில தினங்களில் பிரான்ஸுக்கு இந்த சிலை அனுப்பப்படும். தமிழ் மொழியால் இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது என்ற விஷயத்தை பிரதமர் தன் வாயால் பெருமையுடன் கூறியிருப்பது நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

ஆரம்பம் முதலே தமிழ் மொழியினை பிரதமர் மோடி புகழ்ந்து வருவதும், திருக்குறளையும், தமிழ் ஆன்மீக நுால்களையும், பாரதியார் நுால்களையும் மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசி வருவது, தமிழ் மொழியின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் மோடி வைத்துள்ள அளப்பரிய அன்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இப்போது பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படுவது தமிழின் பெருமையை உலகம் முழுக்க கொண்டு போய்ச் சேர்க்க உதவும் என பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர்.

Updated On: 18 July 2023 5:31 AM GMT

Related News