/* */

உளவு பார்த்த சீன பெண்.. வரைபடம் வெளியிட்டு போலீசார் தேடுதல்

புத்த கயா மாவட்டத்தில் தலாய் லாமாவை உளவு பார்த்ததாக சீன பெண்ணை பீகார் போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

உளவு பார்த்த சீன பெண்.. வரைபடம் வெளியிட்டு போலீசார் தேடுதல்
X

தலாய் லாமா பொது சொற்பொழிவுகளில் பங்கேற்க உள்ள புத்த கயா மாவட்டத்தில் இன்று காலை சீனப் பெண்ணின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து உளவுத்துறை உள்ளூர் போலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கயா மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி), ஹர்பிரீத் கவுர் கூறுகையில், கயாவில் வசிக்கும் சீனப் பெண் ஒருவரைப் பற்றி உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் அவர் மீதான தகவல்களை பெற்றுள்ளோம். இதைக் கருத்தில் கொண்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

சீனப் பெண்ணின் இருப்பிடம் குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. அவர் சீன உளவாளி என்ற சந்தேகத்தை நாங்கள் நிராகரிக்க முடியாது என்று எஸ்எஸ்பி கவுர் கூறினார்.

இதனிடையே சாங் சியாலான் என அடையாளம் காணப்பட்ட சீன உளவாளியின் வரைபடத்தை நேற்று வெளியிடப்பட்டும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டும், உள்ளூர்வாசிகள் அவளைப் பற்றிய தகவல்களை வழங்குமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர். இது குறித்து மத்திய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

தகவல்களின் படைி, சந்தேகத்திற்குரிய சீன உளவாளி ஒரு வருடத்திற்கும் மேலாக போத்கயா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகிறார். இருப்பினும், சீனப் பெண் தங்கியிருப்பது குறித்து இதுவரை எந்தப் பதிவும் இல்லை என கூறப்படுகிறது.

கோவிட் தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த புத்த கயாவுக்கான தனது வருடாந்திர சுற்றுப்பயணத்தை தலாய் லாமா இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியுள்ளார். இதனால், மகாபோதி கோயில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 'கால் சக்ரா' மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலாய் லாமா உரையாற்றினார். டிசம்பர் 31 வரை மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் உரைநிகழ்த்த உள்ளார்.

Updated On: 29 Dec 2022 7:20 AM GMT

Related News