/* */

நிலமோசடி வழக்கு: சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கைது

Sanjay Raut News- நிலமோசடி வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் நள்ளிரவு கைது செய்தனர்.

HIGHLIGHTS

நிலமோசடி வழக்கு: சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கைது
X

நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்

Sanjay Raut News- சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத். எம்.பி.யான சஞ்சய் ராவத் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆதரவாளராவார். இதனிடையே, நில மோசடி தொடர்பாக சட்டவிரோத பணபரிவர்த்தையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் விசாரணை தொடர்பாக சஞ்சய் ராவத் வீட்டில் நேற்று காலை 7 முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது சஞ்சய் ராவத் வீட்டில் வைத்து அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ராவத் வீட்டில் இருந்து 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தும் சஞ்சய் ராவத்திடம் நிலமோசடி மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. இந்நிலையில், பல மணி நேர விசாரணைக்கு பின் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் நள்ளிரவு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சஞ்சய் ராவத் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Aug 2022 6:17 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...