/* */

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை: மோடியுடன் முக்கிய ஆலோசனை

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இரு நாடுகளின் பேச்சு வார்த்தை உலகளவில் உற்று நோக்கப்படுகிறது.

HIGHLIGHTS

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை:  மோடியுடன் முக்கிய ஆலோசனை
X

 நேற்றிரவு டெல்லியில் வந்து இறங்கிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ்.

தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ள ஐரோக்கிய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

எனினும், இதற்கெல்லாம் சற்றும் சளைக்காமல் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போரில் இந்தியா நடுநிலையை மேற்கொண்டுள்ளது. மேலும், போரை நிறுத்த வேண்டுமென்று ரஷ்யாவை இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்த சூழலில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் டெல்லிக்கு நேற்றிரவு வந்துள்ளார். தனது 2 நாள் பயணத்தின் போது பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். அப்போது, ரஷ்யாவின் நடவடிக்கைகள், அமைதிப் பேச்சு வார்த்தை குறித்து, லாவ்ரோவ் பிரதமர் மோடியிடம் எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் இந்திய பயணம் சர்வதேச நாடுகள் உற்று நோக்குவதால், உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Updated On: 1 April 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’