/* */

Operation Ajay: ஆப்ரேஷன் அஜய் திட்டம்: இஸ்ரேலில் சிக்கியுள்ள 212 பேர் டெல்லி வருகை

Operation Ajay: ‘ஆப்ரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் 212 பேர் டெல்லி வந்தடைந்தனர்.

HIGHLIGHTS

Operation Ajay: ஆப்ரேஷன் அஜய் திட்டம்: இஸ்ரேலில் சிக்கியுள்ள 212 பேர் டெல்லி வருகை
X

டெல்லி வந்தடைந்த 212 பேர்.

Operation Ajay: மத்திய அரசு மேற்கொண்டுள்ள ‘ஆப்ரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் 212 பேர் டெல்லி வந்தடைந்தனர்.

கடந்த அக்டோபர் 7ம் தேதி காலை பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்தும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதனைத்தொடர்ந்து பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதில் இரு நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா். 5000க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.

First Flight Brings Back 212 Indians From Israel, Bharat Mata Ki Jai,

பின்னர் இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதல் நடத்தில் காஸா பகுதியில் மின்சாரம், தண்ணீர் மற்றும் எல்லை ஆகியவற்றை தடை செய்தது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இஸ்ரேலின் போர் பிரகடண அறிவிப்புக்கும் கண்டனங்கள் வலுத்து வலுகிறது.

ரஷ்யா, ஈரான், சவூதி உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 6வது நாளாக தொடா்கிறது.

Israel Palestine War, Operation Ajay, Palestine, Rajeev Chandrasekhar,

இந்தநிலையில், இஸ்ரேலில் உள்ள வைர வியாபாரிகள், தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள், மாணவர்கள் என சுமாா் 18,000 இந்தியர்கள் இஸ்ரேலில் வசித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Vante Mataram, Chants Echo in Plane, trending news today

இஸ்ரேல்- ஹமாஸ் குழு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக இன்று 212 பேர் அழைத்து வரப்பட்டனர். மேலும் அங்கு சிக்கியுள்ளவர்கள் படிப்படியாக தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர். போர் தீவிரமடைந்துள்ளதால், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 14 Oct 2023 7:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  4. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  5. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  6. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  7. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  8. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  9. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்