/* */

பாலத்தை மீண்டும் திறப்பதற்கு முன் சான்றிதழ் இல்லை, அரசு அனுமதி இல்லை: பகீர் தகவல்

Bridge Collapse Today-அரசின் டெண்டர் பெற்று பாலத்தை புதுப்பித்த நிறுவனம் பாலத்தை திறப்பதற்கு முன்பு அதிகாரிகளிடம் தகுதி சான்றிதழை எடுக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

பாலத்தை மீண்டும் திறப்பதற்கு முன் சான்றிதழ் இல்லை, அரசு அனுமதி இல்லை: பகீர் தகவல்
X

மோர்பி பால விபத்து - கோப்புப்படம் 

Bridge Collapse Today-குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது.

பாலம் சீரமைப்பதற்காக ஏழு மாதங்களாக மூடப்பட்டது. ஓரேவா என்ற தனியார் நிறுவனம் அரசின் டெண்டர் பெற்று பாலத்தை புதுப்பித்தது. இது அக்டோபர் 26 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.

நேற்று இரவு 'சத்' பூஜைக்காக ஏராளமானோர் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

பாலம் இத்தனைக்கும் சீரமைக்கும் பணிகள் முடிந்து சில நாட்களில் இந்த கோர விபத்து நடைபெற்றது தான் பெரும் துயரம். இந்த விபத்து குறித்து பல்வேறு புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

குஜராத்தின் மோர்பி நகரில் இடிந்து விழுந்த நூற்றாண்டு பழமையான பாலத்தை புதுப்பித்த நிறுவனம், அதை மீண்டும் திறப்பதற்கு முன்பு அதிகாரிகளிடமிருந்து தகுதி சான்றிதழை எடுக்கவில்லை என்று உள்ளூர் முனிசிபல் அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

பாலம் இடிந்து விழுந்ததில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 80 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர் மேலும் 200 பேர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓரேவா என்ற தனியார் அறக்கட்டளை அரசின் டெண்டர் பெற்று பாலத்தை சீரமைத்தது. பாலம் சீரமைப்பதற்காக ஏழு மாதங்களாக மூடப்பட்டது. இது அக்டோபர் 26 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.

மோர்பி முனிசிபல் ஏஜென்சி தலைவர் சந்தீப்சின் ஜலா கூறுகையில், ஓரேவா நிறுவனம், பாலத்தை திறப்பதற்கு முன்பு அதிகாரிகளிடம் தகுதி சான்றிதழை எடுக்கவில்லை. இது ஒரு அரசாங்க டெண்டர். ஒரேவா குழு அதன் புதுப்பித்தல் விவரங்களை அளித்து, பாலத்தைத் திறக்கும் முன் தரச் சரிபார்ப்பைப் பெற வேண்டும். ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை. இது பற்றி அரசாங்கம் அறிந்திருக்கவில்லை ஜலா கூறினார்.

நேற்று, ஒரு வீடியோவில், பலர் பாலத்தின் மீது குதித்து ஓடுவதைக் காண முடிந்தது. அவர்களின் நடமாட்டத்தால் கேபிள் பாலம் அசைந்து காணப்பட்டது.

மீட்பு பணி இரவு முழுவதும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் இந்திய விமானப் படையின் வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, இடிபாடுகளுக்கு மத்தியில் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.

விபத்துக்கு பின்னர் வெளியான காட்சிகளில், பாலம் உடைந்த பிறகு சிலர் பாதுகாப்பாக நீந்துவதைக் காண முடிந்தது. பாலத்தின் உடைந்த முனைகளில் பலர் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. மச்சு நதிக்கரையில் இருந்தவர்கள் தங்களுக்கு எப்படி உதவுவது என்று தேடும் போது, பாதி நீரில் மூழ்கிய சிலர், உதவி கேட்டு அலறினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 31 Oct 2022 11:12 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  2. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  5. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  6. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  7. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  8. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  9. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  10. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...