/* */

ஆடுவோமே! பள்ளு பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

சுதந்திரம் என்பது எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல. இது நமது முன்னோர்களால் கடினமாகப் போராடி பெறப்பட்டது. அதை நாம் பாதுகாக்க வேண்டும்.

HIGHLIGHTS

ஆடுவோமே! பள்ளு பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
X

Independence Day  

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த சிறப்பை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியும் இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்திய சுதந்திரத்தின் தியாக வரலாற்றை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர போராட்டத்தின் வரலாறை நினைவூட்டும் நிகழ்வுகளை இந்திய அரசாங்கம் ஆகஸ்ட் 15 அன்று நடத்தி வருகிறது. இந்த நாளில், நாம் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மற்றும் உயிர்நீத்த அனைவருக்கும் நன்றியுணர்வைத் தெரிவிக்கிறோம். நாம் நமது உரிமைகளைப் பாதுகாக்கவும், நமது நாட்டை சிறந்த இடமாக மாற்றவும் தொடர்ந்து பாடுபடுவோம்.

சுதந்திரம் என்பது ஒரு வரப்பிரசாதம். இது எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல. இது நமது முன்னோர்களால் கடினமாகப் போராடப்பட்டது, மேலும் அதை நாம் பாதுகாக்க வேண்டும்.


சுதந்திர தினத்தில் இந்திய அரசியலமைப்பை உயர்த்தி பிடிப்போம். அதன் விழுமியங்களை சிதைக்காமல் பார்த்து கொள்வதாய் உறுதி ஏற்போம்.

ஆயிரக்கணக்கான மக்களும், எண்ணற்ற தலைவர்களும் இன்னுயிர் ஈந்து பெற்ற சுதந்திரம் நமது இந்திய சுதந்திரம். அதை எத்தகைய சூழ்நிலையிலும் போற்றி பாதுகாப்போம் .

இந்தியா என் தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உறவினர்கள். என்னுயிர் ஈந்தேனும் இந்திய நாட்டை பாதுகாப்பேன் என்ற உறுதியை சுதந்திர தினத்தில் எடுத்து கொள்வோம். இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

எத்தனை லட்சம் உயிர் தியாகங்கள், எத்தனை ஆயிரம் போராட்டங்கள், எத்தனை நூறு ஆண்டுகள் இந்த சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு? எதற்கும் ஈடாகுமா இப்பெரும் சுதந்திரம்? உயிருள்ள வரை தலைமேல் வைத்து கொண்டாடுவோம். இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

ஒற்றுமையில் வேற்றுமை, அதுவே ஒன்றுபட்ட இந்தியா. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

காந்தியும், நேருவும் , அண்ணல் அம்பேத்கரும், பகத்சிங்கும், திருப்பூர் குமரனும், குயிலியும், ஜான்சி ராணியும், கட்டபொம்மனும், கங்காதர திலகரும், லஜபதி ராயும், குதிராம் போஸும் என இன்னும் எத்தனை உயிர்கள் ஈந்து பெற்ற சுதந்திரம்!? எந்நிலை வரினும் உயிரினும் மேலான சுதந்திரத்தை பாதுகாப்போம்.


சுதந்திரம் என்பது ஒரு பரிசு. நாம் அதை மதிக்க வேண்டும் மற்றும் அதை பாதுகாக்க வேண்டும். இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

அனைவரும் ஒன்றுபடுவோம்!! சாதி மத பேதமின்றி சமத்துவம் பேணிக்காப்போம்!!

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக

எண்ணற்ற பல வீரர்களின் தியாகங்களை

இந்நாளில் நினைவுக்கூர்ந்து

வீரவணக்கம் செலுத்துவோம்.

வந்தே மாதரம்!! வந்தே மாதரம்!!

ஜெய்ஹிந்த்!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

சுதந்திர காற்றை சுவாசிக்க செய்வதற்கே

சொல்ல முடியாத் துயரை சுமந்து

போராடி இன்னுயிர் துறந்து

பெற்ற இச்சுதந்திரத்தை

தூக்கத்திலும் மறக்காதீர்!!

துக்கத்திலும் மறக்காதீர்!!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

எனதருமை இந்தியர்களே

என் இதயம் நிறைந்த

இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

மந்திர, தந்திரத்தால் பெற்றதல்ல நம் சுதந்திரம்

பல உயிர்களின் தியாகத்தால்

கிடைத்தது தான் நம் சுதந்திரம்!!


இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

போராடி பெற்ற சுதந்தரத்தை

கொண்டாடி மகிழ்வோம்

சுதந்தர தினத்தன்று!!!

Updated On: 9 April 2024 5:13 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!