/* */

விவசாயிகள் போராட்டம் தொடர்பான கணக்குகள் முடக்க எலன்மஸ்க் மறுப்பு

எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம், விவசாயிகள் போராட்டம் தொடர்பான கணக்குகளை முடக்க இந்திய அரசின் உத்தரவுடன் உடன்படவில்லை.

HIGHLIGHTS

விவசாயிகள் போராட்டம் தொடர்பான கணக்குகள் முடக்க எலன்மஸ்க் மறுப்பு
X

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கணக்குகளை முடக்க இந்திய அரசின் உத்தரவுடன் உடன்படவில்லை என எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டங்களுடன் தொடர்புடைய கணக்குகளை முடக்க, மத்திய அரசின் உத்தரவுகளை எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம் (முன்னாள் ட்விட்டர்) பின்பற்றியுள்ளது. இருப்பினும் தனது நிறுவனம் அரசின் இந்த உத்தரவுகளுடன் உடன்படவில்லை என தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பான டஜன் கணக்கான சமூக வலைதள கணக்குகள் மற்றும் பதிவுகளை முடக்க அவசரகால முடக்க உத்தரவுகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இறுதி செய்த நாட்களுக்குப் பிறகு, X (முன்னாள் ட்விட்டர்) நிறுவனம், இந்திய அரசு வழங்கிய செயல்பாட்டு உத்தரவுகளுக்கு (executive orders) இணங்கி குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை நிறுத்தி வைப்பதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எலான் மஸ்கிற்குச் சொந்தமான அந்நிறுவனம், அரசின் உத்தரவுகளுக்கு தனது நிறுவனத்தின் உடன்பாடின்மையை தெரிவித்து, கருத்துச் சுதந்திரத்திற்கான தனது அர்ப்பணிப்பையும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து எக்ஸ் நிறுவனம் தனது உலகளாவிய அரசு விவகாரங்கள் கணக்கு மூலம், குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகள் மீது எக்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசு நிர்வாக உத்தரவுகளை (executive orders) பிறப்பித்துள்ளது. இதில் கணிசமான அபராதம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய தண்டனைகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவுகளுக்கு இணங்க, இந்தக் கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இருப்பினும், இந்த நடவடிக்கைகளுடன் நாங்கள் உடன்படவில்லை. கருத்து சுதந்திரம் இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்," எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துச் சுதந்திரத்திற்கான தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், உலகளாவிய அரசு விவகார பிரிவு (Global Government Affairs), கணக்குகளை முடக்குவது தொடர்பான இந்திய அரசின் உத்தரவுகளை சவால் செய்யும் ஆணையை எதிர்த்து மேல் முறையீடு நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

"எங்கள் நிலைப்பாட்டுடன் இணங்க, இந்திய அரசின் முடக்க உத்தரவுகளை சவால் செய்யும் ஒரு ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. இந்த நடவடிக்கைகள் குறித்து பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு எங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப அறிவிப்பையும் வழங்கியுள்ளோம்," என்றும் கூறியுள்ளது.

எக்ஸ் நிறுவனம் மேலும் கூறுகையில், " சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் காரணமாக, நாங்கள் நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியாது, ஆனால் அவற்றை பொதுவில் வெளியிடுவது வெளிப்படைத்தன்மைக்கு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். வெளிப்படைத்தன்மை இல்லாதது, பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் தன்னிச்சையான முடிவெடுக்கும் செயலுக்கு வழிவகுக்கும்" என தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பான எக்ஸ் நிறுவனத்தின் கணக்குகள் மீதான மத்திய அரசின் உத்தரவுகள்:

தேசிய தலைநகரைச் சுற்றியுள்ள விவசாயிகளின் 'டெல்லி சலோ' பேரணிக்கு தொடர்புடைய 177 கணக்குகளை முடக்குவது தொடர்பான தனது உத்தரவுகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இறுதி செய்தது. இந்த உத்தரவை மத்திய அரசு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ரெட்டிட், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) மற்றும் ஸ்னாப் ஆகிய நிறுவனங்களுக்கு அனுப்பி, பொது ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு இந்த கணக்குகளை முடக்க வலியுறுத்தியுள்ளது.

Updated On: 22 Feb 2024 4:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...