/* */

கேரளாவில் பறவைக்காய்ச்சல் நோய்க்கு கோழிக்குஞ்சுகள் பலியான சோகம்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவலால் அரசு பண்ணையில் 1,800 கோழி குஞ்சுகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

கேரளாவில் பறவைக்காய்ச்சல் நோய்க்கு கோழிக்குஞ்சுகள் பலியான சோகம்
X

இந்தியாவில் பறவை காய்ச்சல் நோய் பரவல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதனால், கோழி, வாத்து போன்ற வளர்ப்பு பறவையினங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் கோழி பண்ணையில் உள்ள 1,800 கோழி குஞ்சுகள் திடீரென உயிரிழந்து உள்ளன.

இதனை தொடர்ந்து, கேரள விலங்குகள் நல துறை மந்திரி சின்சு ராணி, உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.

இதன்பின், உயிரிழந்த கோழி குஞ்சுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில், பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. எச்5என்1 வைரசின் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு பண்ணையில் 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் உள்ளன. அவற்றில், 1,800 கோழி குஞ்சுகள் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ள பறவை காய்ச்சலால் தமிழகத்தில் கோழிப்பண்ணை தொழிலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக என கோழி பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, பறவைகளை கொல்வதற்கான நடைமுறைகள், பல்வேறு அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் நடைபெறும் என்று கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

Updated On: 14 Jan 2023 6:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?