/* */

பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாடு: பதஞ்சலி நிறுவனத்துடன் அர்ஜூன் முண்டா ஆலோசனை

பதஞ்சலி நிறுவனத்துடன் கூட்டாக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அந்த நிறுவனத்தின் குழுவினருடன் அர்ஜூன் முண்டா ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாடு: பதஞ்சலி நிறுவனத்துடன் அர்ஜூன் முண்டா ஆலோசனை
X

பழங்குடியினர் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக, பழங்குடியினர் நல அமைச்சகம், பதஞ்சலி நிறுவனத்துடன் கூட்டாக மேற்கொண்டுவரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் பதஞ்சலி யோக பீட இணைநிறுவனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா தலைமையிலான குழுவினருடன் ஆய்வு செய்தார்.

மத்திய இணையமைச்சர்கள் பிஷேஸ்வர் டுடு, முன்னாள் இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் உயர் அதிகாரிகள் இந்த உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த அமைச்சகத்தின் உயர் சிறப்பு மையங்கள் கூட்டத்திற்கு ஒத்துழைக்கும் விதமாக நிதியுதவி அளிக்கும் திட்டத்தை பதஞ்சலி நிறுவனம், பழங்குடியினர் நல அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் அர்ஜூன் முண்டா, நாடு முழுவதும் உள்ள பழங்குடியின ஆராய்ச்சி மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை, பழங்குடியினர் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றார். பழங்குடியின ஆராய்ச்சி மையங்கள், பழங்குடியினர் பற்றிய படிப்புகளை தங்களது பாடத்திட்டங்களில் சேர்ப்பதன் மூலம், பழங்குடியின சமுதாயம், கலாச்சாரம், அறிவாற்றல், பாரம்பரியம் பற்றிய அறிவை விரிவுபடுத்த முடியும் என்றார். மருத்துவ தாவரங்களை வளர்த்து, மூலிகை மருந்துகளை தயாரிப்பதன் மூலம், மூலிகை தாவரங்கள் அதிகளவில் விளையும் பகுதிகளில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் என்றும் அர்ஜூன் முண்டா தெரிவித்தார்.

Updated On: 28 May 2022 3:49 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!