/* */

மனைவியுடன் கட்டாய உடலுறவுக்கு எதிரான வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

மனைவியுடன் கணவன் கட்டாய உறவுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை

HIGHLIGHTS

மனைவியுடன் கட்டாய உடலுறவுக்கு எதிரான வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
X

டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனைவியுடன் கட்டாய உடலுறவு கொள்வதற்கு எதிராக பல்வேறு பெண்கள் நல அமைப்புகள் மூலம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 375 பிரிவின் கணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

சட்டப்பிரிவு 375 ன் படி ஒரு பெண்ணை ஏமாற்றி, பலவந்தப்படுத்தி, மருந்து கொடுத்து மிரட்டி அல்லது உறவினர்களை அடைத்து வைத்து கணவன் போல் வேடமிட்டு ஏமாற்றி பாலியல் உறவு கொள்வது, 18 வயதுக்கு குறைவான பெண்களுடன் எந்த வகையில் பாலியல் உறவு கொண்டாலும் அது பாலியல் பலாத்காரம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே சமயம் 18 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் கணவன், மனைவியின் அனுமதி இன்றி பாலியல் உறவு மேற்கொண்டால் அது பாலியல் பலாத்காரம் இல்லை என்று இந்த சட்டம் விலக்கு அளித்துள்ளது. அதாவது ஒரு கணவர் தன் மனைவியிடம் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு மேற்கொண்டால் அது தவறு கிடையாது என்று இந்த சட்டம் சொல்கிறது.

பல்வேறு அமைப்புகள் தொடுத்த இந்த வழக்கில் மூர்க்கமான கணவர்கள் தங்கள் மனைவிகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்த இந்த சட்டம் வழிவகுப்பதால் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் ஷாக்தேர், மற்றும் ஹரி சங்கர் ஆகியோர் விசாரித்து வந்தனர். கடந்த பிப்ரவரி 21 ம் தேதி இந்த வழக்கில் விசாரணை முடிவு பெற்றது. இதில் நீதிபதிகள் இருவரும் மூத்த வழக்கறிஞர்கள் ரெபேக்கா ஜான், ராஜேஸ்வர ராவ் ஆகியோரை ஆலோசகர்களாக நியமித்து இருந்தனர்.

பெண்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் ஆனால் அதேசமயம் இந்த சட்டத்தில் போதிய மாற்றங்களை செய்ய ஆலோசனைகளை செய்து வருவதாலும், இதில் மாநில அரசுகளின் நிலைப்பாடு குறித்து அவர்கள் இதில் பதில் அளிக்க வேண்டும் என்பதால் அதுவரை இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தக் கூடாது என மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், மத்திய அரசு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு எப்போது முடிவெடுக்கும் என்று விளக்கமாக சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவு கொள்வதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2 நீதிபதிகள் தனித்தனி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

மனைவியுடன் கணவன் கட்டாய உறவு கொள்வது தவறு இல்லை என்று நீதிபதி ராஜீவ் ஷாக்தேர், தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மற்றொரு நீதிபதி ஹரிஷங்கர் இதற்கு எதிராக தீர்ப்பு வழங்கி இந்த விளக்கை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார் . இதனையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெண் ஒருவர் தனது கணவர் தன்னை கட்டாயப்படுத்தி வன்புணர்வு செய்வதாக தொடுத்த வழக்கில் மனைவியுடன் கட்டாய உடலுறவு தவறு என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 May 2022 9:00 AM GMT

Related News