/* */

Motivational quotes in tamil-வீழ்வதை எதிர்த்து போராடு...! வாழ்வதே உனக்கான ஏற்பாடு..!

ஒரு கை பார்த்துவிடுவோம் என்று எழுந்துவிட்டால், கடினமான பாதைகள் கூட பஞ்சுமெத்தையாகவே தோன்றும். தூரத்து விடியல் சூரியன் மட்டுமே தெரியும்.

HIGHLIGHTS

Motivational quotes in tamil-வீழ்வதை எதிர்த்து போராடு...! வாழ்வதே உனக்கான ஏற்பாடு..!
X

motivational quotes in tamil-மனதை உத்வேகப்படுத்தும் நம்பிக்கை வாசகங்கள்.(கோப்பு படம்)

Motivational quotes in tamil

வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது சும்மா தானே வந்துவிடாது. அதைநோக்கி பயணிக்கவேண்டும். இலக்கை நிர்ணயம் செய்வது எளிது. ஆனால், இலக்கை அடைய முயற்சி எடுக்காவிட்டால் அது பெரும் கடினம். தொலைநோக்குப் பார்வையில் நம் அறிவை விசாலப்படுத்தவேண்டும். அறிவு விசாலம் ஆகிவிட்டால் எதுவும் உன்னை சஞ்சலப்படுத்தாது. அது சொல்லோ கல்லோ..! இரண்டும் ஒன்றாகவேத் தோன்றும்.

இலட்சியம் கொண்டவனுக்கு கல் என்ன? முள் என்ன..? அவனுக்கு வெற்றி எனும் ஒரே புறா மட்டுமே கண்களுக்குத் தெரியும். நம்பிக்கை ஊட்டும் எழுச்சி சொற்றொடர்களை பார்ப்போம் வாங்க.

தோலாக தூக்கி எறிந்தால், விழுந்த இடத்தில் மரமாக முளைத்துவிடு. உன்னை எறிந்தவன் நிமிர்ந்து உன்னை பார்க்கட்டும்..!

தளர்ந்து நிற்பதால் சோகம் சூழும். சோர்ந்து இருந்தால் சொந்தங்கள் தூற்றும். வளர்ச்சியில் வீழ்ச்சி என்பது ஒரு நிகழ்ச்சி மட்டுமே. முயன்றால் விண்ணைக்கூட முட்டிவிடலாம்..எட்டும் உயரம் தான் உன் வெற்றி..!

உன் உயரம் எல்லைகளைத்தாண்டியதாக இருக்கட்டும். சோதனைகள் வரலாம். இடையூறுகள் வரலாம். சோதனைகளை சாதனைகளாக்கும் வேதம் கற்றுக்கொள்..! சோதனைகளைக் கடந்து செல்ல உன்னைத் தயார் படுத்திக்கொள். உன் வெற்றியை தடுக்க யாரும் இனி இங்கு வரப்போவதில்லை.


Motivational quotes in tamil

சோதனைகள் இல்லாத சாதனைகள் இசை சேர்க்காத பாடலுக்குச் சமமாகும். சோதனை கடந்து சாதித்த வெற்றி தேசமே கொண்டாடும் வெற்றியாகும்.

தடைகளும், எதிர்ப்புகளும் படிக்கல்லாக மாறினால் துணிவுடன் படிமீது கால்வைத்து முன்னேறலாம். அங்கு வெற்றி மாலை சூட தயாராக இருக்கும். கிரீடங்கள் மகுடம் சூட காத்திருக்கும்.

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால், எத்தனை தடை வரினும் சாதனையை தடுத்துவிட முடியாது. உன் விடா முயற்சியால்.

உனக்கான அடையாளம் ஒன்றும் சும்மா வந்துவிடாது. அதை உலகம் உணரும் வரை, உன்னை சுற்றி வரும் விமர்சனம் ஒவ்வொன்றுக்கும் உன் வியர்வைத்துளிகயினை பதிலாக்கு. உன்னை ஏசியோர், வசைபாடியோர் உன்னை எண்ணி வருந்தும் நாள் வாரும். விமர்சனங்கள் மீது திமிரோடு நடந்தால் மட்டுமே காலம் மாறும் முயற்சி கைகொடுக்கும். கனவு நனவாகும் உலகம் உன்னை உணரும்.


Motivational quotes in tamil

ஒவ்வொரு தோல்வியும் உன்னை புது வெற்றிக்கு தயார் செய்யும் படிக்கட்டுகள். கனவுகள் கலைந்து போகலாம். நம்பிக்கையை தகர்ந்து போகவிடாதே..! வெற்றி உனக்கென்றே பிறந்தது. வெற்றிக்காக நீ இல்லை. !

தயக்கம் தடைகளை உருவாக்கும். இயக்கம் தடைகளை உடைக்கும்.

முயற்சி செய்து கொண்டே இரு. ஒரு நாள் தோல்வியும் உன்னிடம் மன்றாடி மன்னிப்புக்கேட்டு தோற்றுப்போகும் உன் முயற்சியிடம்.


Motivational quotes in tamil

இலைகள் உதிர்வதால் மரங்கள் வாடுவது இல்லை. மீண்டும் புதிய இலைகளை தோற்றுவிக்கும். தோல்வி வந்தால் வாடாதே. புதிய இலக்கை நோக்கி பயணம் செய்.

ஒரு வருடம் என்பது, 365 நாட்களை கொண்டதல்ல. 365 வாய்ப்புகளைக் கொண்டது. வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றியை உனதாக்கு..!

வெற்றி பெற விரும்பினால், தடைகளை உடைத்துச் செல். நம்பிக்கையை விதைத்துச் செல். ஒரு பசுமை நிறைந்த வயல்வெளி உன்னை வரவேற்க காத்திருக்கிறது..!

வரும் வரும் என்று பார்த்திருந்தால், கிடைக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தால், வெற்றி வரும் வரும் என்று காத்திருந்தால், எதுவும் நடக்காது. எதுவும் கிடைக்காது. வயலில் இறங்கினால்தான் சோறு. களத்தில் வாளெடுத்து போர் புரிந்தால்தான் வீரன். இறங்கிப் போராடு. சோதனைகள் சாதனைகள் ஆகும். வெற்றி உன் மகுடம் ஆகும்.


Motivational quotes in tamil

முதலில், உங்களால் முடியும் என்று நம்புங்கள். பின் முயற்சி செய்யுங்கள். பிறகு எல்லாம் வெற்றி தான் உங்களுக்கு. முடியாதது ஏதும் இல்லை இங்கு. முயன்றால் எல்லாம் சாத்தியமே.

நீ அடைய நினைக்கும் தூரம் இலக்கு அல்ல. உன் வாழ்க்கை. இலக்கு என்றால் கடமைக்கு ஓடவேண்டும். வாழ்க்கை என்றால் உணர்வோடு ஓடவேண்டும். எது உனக்கு வேண்டும்? இலாக்கா? வாழ்க்கையா..? இலக்கை அடையும் வரை. கல் எறிந்தாலும் சொல் எறிந்தாலும் துடைத்து வீசு..! கலங்காமல் நீ முன்னேறு. அனைத்துக்கும் ஒரே பதில் உன் வெற்றி.

துன்பங்கள் துரத்தினாலும், சோர்ந்து போகாமல், எதிர்த்து நின்று வெற்றி பெறுவதே மனிதனுக்கு அழகு. சந்தோஷமாக வாழ்வதை விட சவால்கள் மேல் சவாரி செய்து வாழ்வதே கெத்து.

அவமானப் படும்போது அவதாரம் எடு. வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு. புண்படுகிற போது புன்னகை செய்.

வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துகாட்டு. மற்றவர் உன்னை திரும்பிப்பார்ப்பார்கள்..!


Motivational quotes in tamil

ஊனம் ஒரு தடையல்ல. ஊன்றுகோலாய் உன் தன்னம்பிக்கை இருக்கும்போது.

மரியாதை கிடைத்தால் மதித்து நில். அவமானம் கிடைத்தால் மிதித்து செல். இலக்கை நோக்கிய பயணத்தில்

வீழ்ந்து விடுவேன் எனும் பயம் வேண்டாம். தாங்கித் தூக்கி விட ஒரு கையாவது இருக்கும், அது உன் தன்னம்பிக்கையாக இருக்கட்டும்..!

Updated On: 22 Aug 2023 12:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  3. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  5. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  6. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  8. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  9. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  10. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...