/* */

Jan Dhan Account-கணக்கில் பணமே இல்லன்னாலும் பணம் எடுக்கலாமா? எப்டீ?

வங்கியில் பணம் எடுப்பதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. உங்கள் சேமிப்புக் கணக்கில் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 வரை பணம் எடுக்கலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

HIGHLIGHTS

Jan Dhan Account-கணக்கில்  பணமே இல்லன்னாலும் பணம் எடுக்கலாமா? எப்டீ?
X

jan dhan account-கணக்கில் பணம் இல்லை என்றாலும் பணம் எடுக்கலாம்.(கோப்பு படம்)

Jan Dhan Account, Bank withdrawal rules, Bank New Rules,Overdraft Facility

உங்கள் சேமிப்புக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், வங்கியில் இருந்து 10,000 ரூபாய் வரை நீங்கள் எடுக்க முடியும். ஆனால் ஒரு சின்ன கண்டிஷன், இந்த வசதியைப் பெற, உங்களிடம் ஜன்தன் கணக்கு இருக்க வேண்டும்.

2017 ஆம் ஆண்டு மத்திய அரசால் ஜன்-தன் கணக்கு தொடங்கப்பட்டது. இது பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது திட்டமாகும். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கைத் தொடங்கினால், காசோலை புத்தகம், பாஸ்புக், விபத்துக் காப்பீடு போன்ற பல வகையான வங்கி வசதிகள் உள்ளன.

Jan Dhan Account

இதற்கெல்லாம் சேர்த்து, வாடிக்கையாளர்களுக்கு ஓவர் டிராஃப்ட் வசதியும் கிடைக்கிறது. அதன் உதவியுடன், உங்கள் வங்கிக் கணக்கில் இருப்பு இல்லாவிட்டாலும் தேவைப்படும்போது பணத்தை எடுக்கலாம். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ், ஜீரோ பேலன்ஸ் கணக்கில் வங்கிக் கணக்குகள் திறக்கப்படுகின்றன. உங்கள் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டாலும், அதற்கு எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்பது இந்த சிறப்பு அம்சமாகும்.

இத்திட்டத்தில் காப்பீடு உள்ளிட்ட பல வகையான வசதிகள் உள்ளன. ஜீரோ பேலன்ஸ் முறையில் இயங்கும் இந்தக் கணக்கு, கோடிக்கணக்கான மக்கள் சேமிப்புக் கணக்கு, காப்பீடு, ஓய்வூதியம் போன்ற பலன்களை எளிதாகப் பெற உதவியுள்ளது.

Jan Dhan Account


ஜன்தன் யோஜனாவின் கீழ், உங்கள் கணக்கில் இருப்பு இல்லாவிட்டாலும், 10,000 ரூபாய் வரை ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறுவீர்கள். இந்த வசதி குறுகிய காலக் கடன் போன்றது. ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெற, உங்கள் ஜன்தன் கணக்குத் தொடங்கி குறைந்தது 6 மாதங்கள் ஆகி இருக்கவேண்டும்.

இதுவும் இல்லை என்றால் ரூ.2 ஆயிரம் வரை ஓவர் டிராப்ட் மட்டுமே கிடைக்கும். இந்தக் கணக்கில் ஓவர் டிராஃப்ட் வசதிக்கான அதிகபட்ச வயது வரம்பு 65 ஆண்டுகள். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறுவதற்கு, நீங்கள் வங்கியில் பெயரளவு வட்டி செலுத்த வேண்டும். ஆனால் இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் வாடிக்கையாளர்களின் சிறு தேவைகள் எளிதில் பூர்த்தி செய்யப்படுகின்றன. அவர்கள் யாரிடமும் கைகளை நீட்ட வேண்டியதில்லை. அதாவது பிறரிடம் கடன் கேட்கத் தேவை இல்லை.

கூடுதல் ஆவணங்கள் மற்றும் கோப்புகளைத் தயாரிப்பதில் சிரமம் இல்லாமல் இந்தப் பணத்தைப் பெறமுடியும். ஜன்தன் கணக்கைத் தொடங்க, உங்களிடம் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு இருக்க வேண்டும். கணக்கு தொடங்குவதற்கான குறைந்தபட்ச வயது 10 ஆண்டுகள். இது மட்டுமின்றி, உங்கள் பழைய சேமிப்புக் கணக்கையும் ஜன்தன் கணக்காக மாற்றலாம்.

Jan Dhan Account

இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்கினால், ரூபே ஏடிஎம் கார்டு, ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு, ரூ.30 ஆயிரம் ஆயுள் காப்பீடு மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கான வட்டி ஆகியவை கிடைக்கும்.

உங்களிடம் ஜீரோ பேலன்ஸ் இருந்தால் ரூ.10,000 ஓவர் டிராஃப்ட் வசதியும் கிடைக்கும். கணக்கைத் தொடங்கிய உடனேயே, ரூ.2000 ஓவர் டிராஃப்டின் பலனைப் பெறலாம். இந்தக் கணக்கை எந்த வங்கியிலும் தொடங்கலாம். இதில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டியதில்லை.

Updated On: 8 Dec 2023 1:53 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு