/* */

அறிவுக் கனிகளில் பங்கு கொடுக்கும் ஆசிரியரை போற்றுவோம்..!

Teachers Day Tamil Quotes-அடி வாங்கி கற்றபோது கல்வி கரைபுரண்டு ஓடியது. ஆசிரியர் மீதான மதிப்பும் மரியாதையும் ஓங்கியிருந்தது. அறிவின் செறிவு ஒளிவீசியது.

HIGHLIGHTS

Teachers Day Tamil Quotes
X

Teachers Day Tamil Quotes

Teachers Day Tamil Quotes

ஆசிரியர் என்பவர அறிவை அள்ளி ஊட்டும் அன்னை. எத்தனை தொழில் செய்தாலும் அத்தனை தொழில் செய்வோரையும் உருவாக்கியவர் ஆசிரியர் மட்டுமே. ஆசிரியரை உபாத்தியார், வாத்தியார், குரு, ஆசான் என்றும் அழைக்கலாம். இந்த சொற்கள் எல்லாம் கல்வி கற்றுக்கொடுப்பவரை குறிக்கும் ஒரு பொருள்சார்ந்த வார்த்தையாகும். உபாத்தியார் மற்றும் குரு ஆகியவை வடமொழிச்சொற்களாகும்.

ஆசிரியர் தினம்

சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர்.சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962ம் ஆண்டு முதல், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

எது எப்படியாகிலும், ஆசிரியர் நமக்கு வழிகாட்டி. தீமையை அகற்றி நல்லதை வடிகட்டி கொடுக்கும் உத்தமர். அப்படியான ஆசிரியர்களை நாம் வணங்கி மகிழ்வோம். இதோ உங்களுக்காக ஆசிரியர் மேற்கோள்கள்.

வெறும் கல்லாய் இருந்த எம்மை, பட்டைத் தீட்டி ஜொலிக்கும் வைரமாய் மாற்றிய தன்னலமற்ற எமது ஆசான்களுக்கு நிகர் புவியில் யாரும் உண்டோ?

எங்கள் மூளையில் ஆணியாய் அடிக்கப்பட்ட அறிவு தீபமாய் ஏற்றப்பட்டது, ஆசிரியர்களினால் தான்! ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்..!

தன்னை உருக்கி, உலகிற்கே ஒளியேற்றும் தீபச்சுடர்கள், நம் ஆசிரியர்கள்..!

ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துகள். பறக்கும் பட்டமல்ல நம் ஆசிரியர்கள்; நம்மை உயர் உயர பறக்க வைக்கும் நூலாகியவர்கள் நம் ஆசிரியர்கள்..!

கல்வி என்னும் பெருங்கடலில் இருந்து, கரை சேர்த்திடும் கலங்கரை விளக்கமவர்கள்,ஆசிரியர்..!

எத்தனை அன்பு? எவ்வளவு அரவணைப்பு? எத்தனை அறிவுரைகள், ஆலோசனைகள்? எல்லாம் எதற்கு? எங்கள் வாழ்வு வளம் பெறத் தானே..? உங்களுக்கு என் இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

அறியாமை என்ற இருள் நீக்கி, அறிவு என்ற தீபம் ஏற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும், இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

நீங்கள் ஒரு அற்புதமான ஆசிரியர் மட்டுமல்ல..! எங்களுக்கான தூண்டுகோலும் நீங்களே..! உங்கள் அன்பிற்கும் அரவணைபிற்கும், ஊக்கத்திற்கும் என்றும் நன்றி கூறுவோம்..! இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்..!

ஆசிரியர்கள் போல நண்பர்கள் கிடைத்தால், உன்னைப் பாடங்களை படிக்கவைப்பார்கள்; நண்பர்கள் போல ஆசிரியர்கள் கிடைத்தால், அவர்களே ஒரு பாடமாக உன்னைப் படிக்க வைப்பார்கள்..!

கல்வி எனும் திரி போட்டு, அறிவு எனும் விளக்கேற்றி, வாழ்வினை ஒளிரச் செய்து, ஒளிந்திருக்கும் திறமைகளை மெருகூட்டிய உங்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..1

நீங்கள் செல்லமாக அடித்த முதுகு சிலிர்க்கின்றது. என் உயர்வில் உம் உழைப்பும் இருக்கின்றது..! உங்கள் நினைவு தினமும் மனதில் ஆர்ப்பரிக்கின்றது..! இப்படிக்கு உங்கள் அன்பு உள்ளத்தில் குடியிருக்கும் மாணவன்..! இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

ஆ – ஆறறிவுக்குள், சி – சிந்தனையைப் பெருக்கி ரி – சரியாமல் நிறுத்தி, ய – செயலைத் திருத்தி, ர் – கீர்த்தியை உயர்த்தி மனம் நிறைக்கும் ஆசிரியருக்கு நன்றிகள்..! இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

சுயநலமில்லா சுயரூபம் தன் அறிவொளியை பிறருக்கு அறிவுரையால் ஏற்றுவார்..! ஏறுபவனுக்கு ஏணி தந்து, திசை மாறியவனுக்கு வழிகாட்டி..! கல்விக்கண் தந்து ஒழுக்கமெனும் ஒளியையும், தந்தார்..! காதைத் திருகியும் கற்பிக்கும் ஆசான்..! இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

இன்று வரையிலும், இனிமேலும் நாங்கள் காணும் வெற்றிகளுக்கும் நாங்கள் அடையும் புகழுக்கும் உரியவர்கள் நீங்கள் தானே, எங்கள் ஆசானே..! இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

உலகின் உயர்வுக்கு உன்னத மாண(ன)வர்களை உருவாக்கித் தலைசிறந்து விளங்க, உடலாலும் உள்ளத்தாலும் உதவி நிற்கும் உன்னதத் தொழிலே ஆசிரியர்..! அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

தமிழின் உயிர் எழுத்தில் உள்ள உயிராய் எனக்கு கல்வி புகட்டிய அனைத்து ஆசான்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..!

அடுத்த தலைமுறையை உருவாக்க இருக்கும், இந்த தலை முறையின் ஆசிரியர்களுக்கு, எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

நான் வாழ, நான் முன்னேற, எனக்காக உழைத்தவர்கள், நான் இன்று மகிழ்வோடு வாழ, அன்று துன்பம் பொறுத்தவர்கள்..! நான் முத்து சேர்க்க, மூச்சடக்கி முத்துக் குளித்தவர்கள்..! என் இளம் வயதில் கண்ட நடமாடும் தெய்வங்கள், என் ஆசிரியர்கள்..! அவர்களுக்கு எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

ஒரே ஒருவரிடம் நண்பனை, வழிகாட்டியை, பெற்றோரை, இறைவனை ஒன்றாக பார்க்க முடியும் என்றால், அது ஆசிரியராக மட்டுமே இருக்கமுடியும்..! இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துகள்..!

நமக்கு உலகைக் காட்ட, நம்மை செதுக்கியவள் தாய்..! உலகிற்கு நம்மைக் காட்ட, செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்..! ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உண்டு..! ஒன்று தாயின் கருவறை..! இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை..! தாயின் கருவறையில் ஒருவன் உயிரையும், ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவையும் பெறுகிறான்..! அனைத்து ஆசிரியர்களுக்கும், என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

மாணவனின் கனவுகளை கைவசப்படுத்த உதவும் தூண்டுகோலாக இருப்பவரே சிறந்த ஆசிரியர்..! ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

அறிவென்னும் விளக்கேற்றி, அன்பென்னும் வழிகாட்டி, எமது வாழ்க்கையில் ஏற்றம் பெற உதவிய ஆசான்களுக்கு, ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..!

எங்களை உயரத்திற்கு அனுப்பி விட்டு, பொறாமை கொள்ளாது பெற்றோரைப் போலவே கீழிருந்து ரசிக்கும் இன்னொரு உயிர் ஆசிரியர் மட்டுமே..! கோடான கோடி நன்றிகள்..! இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 March 2024 3:43 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...