/* */

முகம் மென்மையாக பளபளக்கணுமா..? பெண்களே சாத்துக்குடி ஜூஸ் குடிங்க..!

Sathukudi Benefits in Tamil-கோடை காலத்துக்கு சாத்துக்குடி ஜூஸ் களைப்பை நீக்கி புத்துணர்வைத் தரும் பானமாகும். அதிலுள்ள ஊட்டச்சத்துகள் குறித்து அறிவோம் வாங்க.

HIGHLIGHTS

Sathukudi Benefits in Tamil
X

Sathukudi Benefits in Tamil

Sathukudi Benefits in Tamil

கோடை வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் சும்மா ஜில்லுன்னு ஒரு சாத்துக்குடி ஜூஸ் ஒண்ணு குடிச்சா..ஆஹா..அந்த குளு குளு சாத்துக்குடி சுவை அப்டியே ஒரு எனர்ஜியை கொண்டுவரும். களைப்பு நீங்கி ஒரு புத்துணர்வு வரும்.

சாத்துக்குடி ஊட்டச்சத்துகள்

சாத்துக்குடி ஜூஸ் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அடிப்படையில் கோடைக்கு ஏற்ற சிறந்த பானமாக கருதப்படுகிறது. அந்த அளவில் சாத்துக்குடியில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் ஏராளமாக அடங்கியுள்ளன. என்னென்ன சத்துகள் உள்ளன :

  • நார்ச்சத்து
  • வைட்டமின் சி
  • கால்சியம்
  • இரும்புச்சத்து
  • பொட்டாசியம்
  • காப்பர் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

சாத்துக்குடியில் கலோரிகள் குறைவாக உள்ளதே இதன் தனிச் சிறப்பாகும். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. ஒரு பெரிய அளவு சாத்துக்குடியில் அதிகபட்சமாக 43 கலோரிகள் மட்டுமே இருக்கும். சாத்துக்குடி உடலுக்கு அளிக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

சீரான செரிமானம்

கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு அஜீரணக்கோளாறுகள் ஏற்படுவது வழக்கம். ஆரோக்யமற்ற உணவுகளை உட்கொண்டு, பலரும் அது சரியாக செரிமானமாகாமல் அவஸ்தைப்படுவார்கள். இவ்வாறான காலங்களில் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை அடிக்கடி ஏற்பட்டால், சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது சிறந்தது. இதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள், வயிற்றில் பித்த நீர், செரிமான அமிலங்களை சீரான அளவில் பராமரிக்கும்.அதாவது சாத்துக்குடி குடலியக்கத்தினை சிறப்பாக செயல்பட வைப்பதுடன் அமில உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது.

எடை குறைய

கோடை காலத்தில் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பது நல்ல பலனைத்தரும் என்பார்கள். எனவே எடையைக் குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் டயட்டில் சாத்துக்குடி ஜூஸை தவறாமல் சேர்த்துக் கொண்டால் உடல் எடை வேகமாகவும், ஆரோக்யமான முறையிலும் குறைவதை பார்க்க முடியும்.

உடல் வறட்சிக்கு

கோடை காலத்தில் உடல் வறட்சி ஒரு பொதுவான பிரச்னையாகும். ஏனெனில் சூரிய வெப்பம் உடலில் உள்ள நீர்ச்சத்து மற்றும் ஆற்றலை உறிஞ்சிவிடும். இதைத் தவிர்ப்பதற்கு சாதாரண தண்ணீரைக் குடிப்பது மட்டுமே போதாது. அத்துடன் பழச்சாறுகளையும் பருகினால் தான் உடலுக்கு நீர்ச்சத்துடன், ஆற்றலும் கிடைக்கும். அதிலும் குறிப்பாக சாத்துக்குடி ஜூஸைப் பருகினால், உடலின் ஆற்றல் மற்றும் நீர்ச்சத்து சட்டென்று அதிகரிக்கும். சோர்வு உடனடியாக நீங்கும்.

நோயெதிர்ப்பு சக்தி

கொரோனா போன்ற கொடிய நோய்கள் பரவி வரும் சூழ்நிலையில் எல்லோருக்கும் உறுதியான நோயெதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம் ஆகும். ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி உறுதியாக இருந்தால் தான், உடலை பாதிக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். சாத்துக்குடியில் உள்ள அதிகப்படியான லெமொனின் க்ளுக்கோசைடு என்னும் ப்ளேவோனாய்டு, ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. ஆகவே, அடிக்கடி சாத்துக்குடி ஜூஸ் குடித்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.

கண் தொற்றுகளுக்கு

சாத்துக்குடி கண்களின் ஆரோக்யத்தில் பல மாயங்களைப் புரியும். இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால், பல வகையான கண் தொற்றுகள் மற்றும் கண் பிரச்னைகளான க்ளுக்கோமா, கண் புரை போன்ற குறைபாடுகளைத் தடுக்கும்.

பொலிவுமிகு சருமம்

சாத்துக்குடி ஜூஸ் நல்ல அழகான மற்றும் பொலிவான சருமத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துகள் சரும செல்களுக்கு நல்ல ஊட்டத்தை வழங்கி, அழகை மேம்படுத்துகிறது. அதனால் சருமமா மென்மையாக பொலிவுடன் இருக்கும். குறிப்பாக முகப்பரு, சீழ் நிறைந்த பருக்கள் போன்றவை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் மிகவும் நல்லது.

தலைமுடி

சாத்துக்குடி சருமத்திற்கு மட்டுமின்றி, தலைமுடியின் ஆரோக்யத்தையும் மேம்படுத்தக்கூடியது. இதில் உள்ள பல்வேறு பண்புகள், கோடையில் வரக்கூடிய தலை முடி சம்பந்தமான பிரச்னைகளைத் தடுக்கும் மாற்றல் கொண்டது. குறிப்பாக பொடுகு மற்றும் முடி வெடிப்பு போன்ற பிரச்னைகளை சந்திப்பவர்கள், சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால், விரைவில் இப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 5 April 2024 6:02 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை