/* */

Jathikai Uses in Tamil-ஜாதிக்காயில் இவ்ளோ நன்மைகள் உண்டா..?

மலைப்பிரதேசங்கள் போன்ற குளிர்ச்சியான இடங்களில் அதிக அளவு விளைவிக்கப்படும் ஜாதிக்காயின் நன்மைகள் குறித்து அறிந்துகொள்வோம் வாங்க.

HIGHLIGHTS

Jathikai Uses in Tamil-ஜாதிக்காயில் இவ்ளோ நன்மைகள் உண்டா..?
X

jathikai uses in tamil-ஜாதிக்காய் பயன்பாடு (கோப்பு படம்)

Jathikai Uses in Tamil

ஜாதிக்காயினை துண்டு துண்டாக நறுக்கி மாங்காய் எலுமிச்சம்பழம் போன்று ஊறுகாய் செய்து வைத்து, பயன்படுத்தி கொள்ளலாம். இத்தகைய ஜாதிக்காய் என்னென்ன மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு சளி , இருமல், சுரம் , வயிறு உப்புசம், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் இருந்தால் ஜாதிக்காயை லேசாக உரசி, தாய்மார்கள் வெந்நீர் அல்லது தாய்ப்பாலில் , கலந்து நாக்கின் மீது தடவி விடுவார்கள். இப்படி செய்வதால் வயிற்றுக் கோளாறுகள் இருந்தால் விரைவில் சரியாகிவிடும்.

Jathikai Uses in Tamil

ஜாதிக்காயில் எவ்வளவு நன்மைகள் உள்ளனவோ அதேபோல ஜாதிக்காய் எண்ணெயிலும் பல ஆரோக்ய நன்மைகள் உள்ளன.

அத்தியாவசியத் தேவையான ஜாதிக்காய் எண்ணெயை பற்றி பெண்களாகிய நீங்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெய் சுவை, புத்துணர்ச்சி மற்றும் நறுமணத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றன. ஜாதிக்காய் எண்ணெயில் கிருமி நாசினி, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு போன்ற பண்புகளும் நிறைந்துள்ளன.

பெரும்பாலும் பிரியாணி உட்பட பாரம்பரியமான ஒரு சில இந்திய உணவுகளில் ஜாதிக்காய் பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை பல மடங்கு அதிகரிக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. ஜாதிக்காய் எண்ணெய் பெண்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இன்றைய பதிவில் படித்தறியலாம்.

Jathikai Uses in Tamil


மன அழுத்தத்தை நீக்கும்

ஜாதிக்காய் எசன்ஷியல் எண்ணெய் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை நீக்கும் திறன் கொண்டது. ஜாதிக்காய் எண்ணெய் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து, மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து விடுபட உதவுகிறது.

நல்ல தூக்கம் வரும்

ஜாதிக்காயில் உள்ள குணப்படுத்தும் பண்புகள் நரம்புகளை ரிலாக்ஸ் செய்ய உதவுகின்றன. இந்தப் பண்புகள் நரம்புகளை அமைதி படுத்தவும், செரோடோனின் ஹார்மோனை வெளியிடவும் உதவுகின்றன. இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

Jathikai Uses in Tamil


இரத்த ஓட்டத்தை சீராக்கும்

ஜாதிக்காய் எண்ணெயில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இரத்த ஓட்டம் சீராக இருந்தால் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜன் விநியோகம் சீராக நடைபெறும்.

வயிற்றுப் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்

வயிறு தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அஜீரண தொந்தரவுகளை சரி செய்ய ஜாதிக்காய் எண்ணெய் உதவும். இதில் உள்ள சக்தி வாய்ந்த ஃபைட்டோ நியூட்ரியண்ட்கள் சிறந்த செரிமானத்திற்கு உதவுகின்றன. ஜாதிக்காய் எண்ணெய் பசியை கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி வாயு, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மலச்சிக்கல், குமட்டல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.

Jathikai Uses in Tamil

உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும்

சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க ஜாதிக்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றன.

வாய் துர்நாற்றத்தை போக்கும்

ஜாதிக்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் துர்நாற்றத்தை நீக்க உதவுகின்றன. இதைத் தவிர ஜாதிக்காய் எண்ணெயில் உள்ள ஆண்டி செப்டிக் பண்புகள் பல் மற்றும் ஈறு வலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Jathikai Uses in Tamil

கால் பிடிப்புகளை சரி செய்யும்

ஜாதிக்காய் எண்ணெய் இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அசௌகரியம், ஹார்மோன் சமநிலையின்மை சோர்வு போன்றவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜாதிக்காய் எண்ணெயில் உள்ள பண்புகள் தசைப்பிடிப்பை குறைக்கவும், மனநிலை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

மூளையின் செயல்பாட்டிற்கு நல்லது

மூளை திறம்பட செயல்படவும், சோர்வை நீக்கவும், கவனிக்கும் திறனை அதிகரிக்கவும் ஜாதிக்காய் உதவும். இதில் உள்ள இயற்கையான சேர்மங்கள் நினைவாற்றலை கூர்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

Updated On: 12 Jan 2024 1:25 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்