/* */

நரம்பு பாதிப்பு சிகிச்சையில் பயனளிக்கும் அச்சு ஜெல் கண்டுபிடிப்பு

நரம்பு பாதிப்பு சிகிச்சையில் பயனளிக்கும் திறன்மிகு முப்பரிமாண அச்சு ஜெல் அடிப்படையிலான படலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நரம்பு பாதிப்பு சிகிச்சையில் பயனளிக்கும் அச்சு ஜெல் கண்டுபிடிப்பு
X

நரம்புகளில் ஏற்படும் பாதிப்பை விரைவில் குணப்படுத்தவும் சவாலான அறுவை சிகிச்சைகளில் உதவும் வகையிலுமான புதிய முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் திறன்மிகு ஜெல் அடிப்படையிலான படலம் உருவாக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் போது நரம்பு குழாயாக தானாகவே மாறக்கூடிய தன்மையை இது பெற்றுள்ளது.

திட்டம் 1: திட்டமிடப்பட்ட வடிவ சிதைவுகளுடன் 4D அச்சிடப்பட்ட ஹைட்ரஜல் வழித்தடத்தை உருவாக்குதல். (i) கணக்கீட்டு வடிவமைப்பின் அடிப்படையில் துல்லியமான வடிவத்துடன் வரையறுக்கப்பட்ட ஃபார்முலேஷன் ஜெல்களின் 3D அச்சிடுதல், (ii) 3D அச்சிடப்பட்ட ஜெல் தாள், (iii) ஈரப்பதம் உறிஞ்சுதலுடன் திட்டமிடப்பட்ட வடிவ சிதைவு.

பாலிமர் அடிப்படையிலான குழாய்கள் தான் தற்போது அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த முறையில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. இதன் காரணமாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் திறன்மிகு ஜெல் அடிப்படையிலான படலத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

திட்டம் 2: அறுவைசிகிச்சையின் போது ஜெல் ஷீட் விரைவாக வடிவ மாற்றத்திற்கு உள்ளாகும் திறனைக் காட்டும் செயல்முறை, அறுவைசிகிச்சைகளின் சிக்கலான தன்மையைக் குறைக்க புற நரம்பு பழுதுக்கான நரம்பு வழித்தடங்களை உருவாக்குகிறது.

இந்த தொழில்நுட்பத்தில் குறிப்பிட்ட பகுதியின் மாதிரி காணொளி வாயிலாக மென்பொருளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து முப்பரிமாண அச்சு முறையில் வடிவமைக்கப்படுகிறது. இது போன்ற தொழில்நுட்பம், நான்கு பரிமாண அச்சு என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் கௌசிக் சட்டர்ஜி தலைமையிலான குழு இத்தகைய ஜெல் படலத்தை சமீபத்தில் ஆய்வு செய்தது. அட்வான்ஸ்ட் ஹெல்த்கேர் மெட்டீரியல்ஸ் என்ற சஞ்சிகையில் இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Updated On: 4 May 2023 5:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்