/* */

basil in tamil-துளசி எதுக்கெல்லாம் பயன்படும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

basil in tamil-துளசி இயற்கை மூலிகை என்பதாலேயே பல வீடுகளில் துளசி மாடம் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

basil in tamil-துளசி  எதுக்கெல்லாம் பயன்படும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!
X

basil in tamil-துளசிச் செடி (கோப்பு படம்)

basil in tamil-கிராமங்களில் பொதுவாகவே எல்லா இடங்களிலும் சாதாரணமாக துளசி முளைத்துக்கிடக்கும். இன்றும் கிராமங்களில் பாட்டி வைத்தியம் என்றால் அதில் துளசிக்கு முதல் இடம் உண்டு. இந்த துளசியில் அவ்வளவு மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கின்றன. துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தக் கூடிய ஆற்றலைக்கொண்டுள்ளது. மேலும், துளசி ஜீரண சக்தியை மேம்படுத்தி பசியை தூண்டி விடுகிறது. இதனால் கிராமங்களில் பொதுவாக எல்லோருமே குழந்தைகளுக்கு அடிக்கடி துளசிச்சாற்றைக் கொடுப்பார்கள்.

துளசியின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம், ஆயினும் துளசி சற்றின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்து பலரும் அறியாமல் இருக்கின்றனர். துளசி சாற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராடும் ஆற்றலை உடலுக்கு வழங்குகின்றன. துளசி சாறு மன அழுத்தத்தைக் குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது தவிர, வீக்கத்தைக் குறைப்பதிலும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் நன்மை பயக்கிறது. இது சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இன்றையப் பதிவில், துளசி சாற்றின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து காண்போம்.


துளசிச் சாறு

ஆங்கிலத்தில் பேசில் என்று அழைக்கப்படும் துளசியில் அதிக மருத்துவ குணங்கள் அடங்கியிருப்பதால் அது முக்கியத்துவம் வாய்ந்த மூலிகையாக உள்ளது. துளசியின் இலைகள், பூக்கள், வேர்கள், பழங்கள், தண்டு உட்பட அனைத்து பகுதிகளும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்கிறது. துளசிச் சாறு அதிகளவில் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இந்த ஊட்டச்சத்துகள் துளசி தாவரத்தின் அனைத்து பாகங்களில் இருந்தும் கிடைக்கிறது.இது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

basil in tamil

துளசியில் உள்ள ஊட்டச்சத்துகள்

துளசியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் புரதம், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் உள்ளன. துளசியில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் கால்சியம் ஆகிய தாதுக்களும் அதிக அளவில் உள்ளது. நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க துளசிச் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

துளசியின் நன்மைகள்

உடல் எடையைக் குறைய

உடல் எடையைக் குறைக்க துளசி உதவுகிறது. துளசி இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. உடலில் அதிக அளவில் குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. அவ்வாறு உடல் பருமன் உள்ளவர்களுக்கு உடல் எடையைக் குறைக்க துளசிச் சாறு பயனுள்ளதாக இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க சுமார் 250ml துளசி சாற்றை எடுத்துக் கொள்ளலாம்.

புற்றுநோய் சிகிச்சைக்கு

புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க உதவும் மருத்துவ குணங்கள் துளசியில் உள்ளது. சில ஆராய்ச்சிகளின் முடிவில், புற்றுநோய் செல்களை அழிப்பதில் துளசி பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. துளசியில் உள்ள துலூஸில் பைட்டோ வேதிப்பொருள், ரோஸ்மரினிக் அமிலம், மார்ட்டெனோல், லுடோலின் மற்றும் அபிஜெனின் ஆகியவை புற்றுநோயைத் தடுப்பதில் சிறப்பாக செயல்புரிகின்றன.மார்பக புற்றுநோயைத் தடுக்கவும் துளசிச் சாறு நன்மை அளிக்கிறது.

மன அழுத்தம் நீங்க

மன அழுத்தத்தை போக்க துளசிச் சாறு உதவுகிறது. துளசி சாறு ஹார்மோன்களை இயல்பாக்க உதவும் ஒரு வகை இயற்கை மருந்தாகின்றன என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். துளசியை ஏதோ ஒரு வடிவில் தினமும் உட்கொள்வதால் மன அழுத்தம் மற்றும் மனம் சார்ந்த பிற நோய்களை குறைக்கிறது.

basil in tamil

சர்க்கரையை கட்டுப்படுத்த

நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும் ஒரு முக்கியமான மருந்தாக துளசி கருதப்படுகிறது. ஏனெனில், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகள் துளசியில் உள்ளது. இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும், இதில் நிறைந்துள்ளன. மேலும், துளசி சாற்றில் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. துளசியில் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படும் சபோனின்கள், ட்ரைடர்பென்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

துளசிச் சாற்றில், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துளசி இலைகளை தினசரி உட்கொள்ள வேண்டும். இது பல வகையான நோய்களைத் தடுக்கிறது.


basil in tamil

துளசிச் சாற்றின் பக்க விளைவுகள்

துளசி, உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. எனினும் சில அரிதான சந்தர்ப்பங்களில், இது சில பக்க விளைவுகளுக்கும் வழிவகுக்கிறது:

துளசிச் சாறு இரத்தம் உறைவதை தடுக்கின்றது. இதனால் காயங்கள் ஏற்பட்டால் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், துளசிச் சாற்றை அதிகமாக உட்கொள்ளக் கூடாது.

இரத்த அழுத்த அளவு இயல்பாக இருந்தால் துளசிச் சாற்றை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில், துளசிச் சாறு இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் துளசி சாற்றை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

கருந்துளசி

கருந்துளசி கேரளாவில் அதிகம் காணப்படுகிறது. இதுவும் மருத்துவ குணம் நிறைந்தது.

Updated On: 29 Dec 2022 7:23 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்