/* */

'நியூ லுக்'கில் அசத்தும் 'தங்கலான்' விக்ரம்

vikram new look photos- பா. ரஞ்சித் இயக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடிக்கும் ‘சீயான்’ விக்ரம், நீண்ட தாடியுடன் அசத்தலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

HIGHLIGHTS

நியூ லுக்கில் அசத்தும் தங்கலான் விக்ரம்
X

vikram new look photos - ‘தங்கலான்’ படத்தில், வித்யாசமான தோற்றங்களில் நடிகர் விக்ரம்.

vikram stunning new look for thangalaan movie, vikram new look photos- தமிழ் சினிமாவில், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நடிகர் விக்ரமிற்கு திருப்புமுனையாக அமைந்த படம், 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில், ஆதித்த கரிகாலனாக நடித்து அசத்தி இருந்தார். படத்தில் வரும் தனது கேரக்டருக்காக, உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் உலக நாயகன் கமலுக்கு அடுத்தபடியாக, பேசப்படும் நடிகர் விக்ரம். பாலா இயக்கத்தில் நடித்த 'சேது' படத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளியாகவும், அதே பாலா இயக்கத்தில் 'பிதாமகன்' படத்தில், வெட்டியான் வேடத்திலும் நிகரற்ற ஒரு நடிப்பை தந்தவர் விக்ரம். 'காசி' படத்தில் பார்வையற்ற ஒரு தெரு பாடகனாகவும், 'ஐ' படத்தில், நோய்வாய்ப்பட்ட கூன் விழுந்த கேரக்டரிலும் தனது நடிப்பில், தனிமுத்திரை பதித்தவர் விக்ரம்.


இயக்குநர் ஹரி இயக்கத்தில், 'சாமி' படத்தில், கம்பீரமான ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பில் அதகளம் செய்தவர் விக்ரம். இப்படி, தனது நடிப்பில், பல பரிமாணங்களை காட்டி அசத்திய போதும், சில ஆண்டுகளாக வெளிவந்த விக்ரம் படங்கள், பெரிய அளவில் பேசப்படவில்லை. நல்ல நடிப்பை அவர் தந்த போதிலும், கதையம்சம், பாடல்கள், இசை போன்ற சில காரணங்களால், அந்த படங்கள் போதிய வெற்றியை பெறவில்லை. சமீபத்தில் வெளியான 'கோப்ரா' 'மகான்' போன்ற படங்களும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் பா.ரஞ்சித் உடன் கூட்டணி அமைத்துள்ளார் விக்ரம்.


இவர்கள் கூட்டணியில், தற்போது 'தங்கலான்' படம் தயாராகி வருகிறது. 'ஸ்டூடியோ கிரீன்' ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் நடிகர் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கே.ஜி.எப் உருவான கதையை மையமாக வைத்து, இப்படம் தயாராகி வருகிறது.

'தங்கலான்' படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளியன்று இப்படத்தின் 'கிளிம்ப்ஸ்' வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்நிலையில், 'தங்கலான்' படத்துக்காக நடிகர் சீயான் விக்ரம், வித்தியாசமான கெட் அப்பில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


நீண்ட, அடர்த்தியான தாடியுடன் இருக்கும் விக்ரமின் 'நியூ லுக்' புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சூப்பராக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். பா.ரஞ்சித்தும் நடிகர் விக்ரமும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை. இவர்கள் கூட்டணியில் உருவாகும் 'தங்கலான்' படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பா. ரஞ்சித், சமூக உணர்வுகளை பிரதிபலிக்கும் கதையம்சங்களை கொண்ட படங்களை இயக்குவதில் வல்லவர் என்பதால், இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் ஒரு படைப்பாக அமைய வாய்ப்புள்ளது.

Updated On: 23 Nov 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...