/* */

டிவி சீரியல் வில்லி நடிகைக்கு அடித்தது 'ஜாக்பாட்'

vijay tv serial actress archana acting in movie-விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் வில்லியாக நடித்த நடிகை அர்ச்சனா, அருள்நிதி படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

HIGHLIGHTS

டிவி சீரியல் வில்லி நடிகைக்கு அடித்தது ஜாக்பாட்
X

vijay tv serial actress archana acting in movie-விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ வில்லி நடிகை அர்ச்சனா, சினிமாவில் நடிக்கிறார்.

vijay tv serial actress archana acting in movie, vijay tv serial actress archana latest news- தனியார் தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்க வேண்டுமென பல பேர் வரிசையில் நின்று வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி வாய்ப்பு கிடைத்து நடித்து வரும் சீரியல் நடிகைகள் பலரும் சமீபகாலமாக படங்களில் வாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்திவிட்டு சீரியலை விட்டே விலகி சென்று விடுகின்றனர்.

உதாரணமாக நடிகைகள் ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் உள்ளிட்ட நடிகைகள் சீரியலில் நடித்துவிட்டு பின்னர் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இவர்களை பார்த்து பின்னால் வந்த நடிகைகளும், படங்களில் வாய்ப்பு கிடைக்க சமூக வலைத்தளங்களில் ஆட்டம், பாட்டம் கவர்ச்சி புகைப்படங்கள், விடியோக்கள் என அனைத்தையும் வெளியிட்டு ட்ரெண்டும் ஆகி விடுவார்கள்.


அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி 2' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை அர்ச்சனா, தீடீரென சீரியலை விட்டு விலகி, தற்போது படத்தில் நடிக்க 'கமிட்' ஆகியுள்ளார்.

2015 ம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் திகிலுடன் வெளியான படம் தான் 'டீமான்ட்டி காலனி'.

ரூபாய் 2 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 17 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்தது. 'டீமான்ட்டி காலனி'யில் திருடப்பட்ட நகையை ஆசைப்பட்டு கொண்டு வந்த இளைஞரால் கடைசியில் அந்த நகைக்கு சொந்தமான பேயிடம் சிக்கிக்கொண்டு எப்படி அவர்கள் மூவரும் தப்பித்து வெளி வருகின்றனர் என்பதுதான் இப்படத்தின் கதை. ஒரு அறையில் மட்டுமே நடக்கும் இப்படத்தின் கதை திரையரங்குகளில் பார்த்த ஒவ்வொருவரையும் அச்சத்தில் உறைய வைத்தது எனலாம்.


இதனிடையே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை, இந்தாண்டு படமாக உருவாக்கலாம் என இயக்குனர் அஜய் ஞானமுத்து, அருள்நிதி கூட்டணியில் மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தில் அருள்நிதிக்கு தங்கையாக 'ராஜா ராணி 2' சீரியலில் நடித்து வந்த வி.ஜெ.அர்ச்சனா நடிக்க 'கமிட்' ஆகியுள்ளார். இவர் அண்மையில் அந்த சீரியலை விட்டு விலகியதையடுத்து திருமணம் செய்துகொள்ள போகிறார், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கிறார் என்ற புரளிகள் கிளம்பியது.

ஆனால் யாரும் ரதிர்பார்காத வகையில், படத்தில் நடிக்க போகிறார் வி.ஜெ.அர்ச்சனா. 'ராஜா ராணி 2' சீரியலில் வில்லியாக களமிறங்கிய இவருக்கு தங்கச்சி ரோல் எப்படி செட்டாகும் என்பதை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஒருவேளை இப்படத்தில் அவர் பேயாக நடிப்பதற்கான வாய்ப்புக் கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இவர், சிறந்த வில்லி நடிகை சிறப்பு விருது பெற்றவர். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டார்.

சமீபத்தில் 'தம்மா துண்டு' என்ற இவரது பாடல் ஆல்பம் வெளியானது. இவரது நடிப்பில் 'அவள் என்னவள்' என்ற வெப் சீரியல் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 4 Jan 2023 6:28 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு