/* */

'நயன்தாரா இருக்க பயமேன்' - விக்னேஷ் சிவனுக்கு வந்தது புது நம்பிக்கை

vignesh shivan latest news- அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்துள்ள விக்னேஷ் சிவன், நயன்தாராவை வைத்து படம் எடுக்கும் திட்டத்தில், தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.

HIGHLIGHTS

நயன்தாரா இருக்க பயமேன் - விக்னேஷ் சிவனுக்கு வந்தது புது நம்பிக்கை
X

vignesh shivan latest news- அஜித் படம் கைநழுவிய நிலையில், மனைவி நயன்தாராவை படம் எடுக்க, திட்டமிட்டுள்ளார் விக்னேஷ் சிவன் (கோப்பு படம்)

vignesh shivan next movie with nayanthara, vignesh shivan next film, vignesh shivan and nayanthara latest news, vignesh shivan latest news- தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக உள்ள அஜித் நடிக்கும் அடுத்த படத்தை, விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அஜித் நடிக்கும் படத்தை இயக்கும் அற்புதமான வாய்ப்பு கை நழுவிப்போனது. ஆனால், அஜித் படம் போனால் என்ன, என்னுடன் நயன்தாரா இருக்கிறார். அஜித் படத்துக்கு முன்னதாக, நயன்தாராவை வைத்து படம் இயக்குவேன், என சவால் விட்டு வருவதாக, பரபரப்பான தகவல் வைரலாகி வருகிறது.


'துணிவு' படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந் நிலையில் இந்த படம் திடீரென டிராப் ஆனதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அடுத்து விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்புகள் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால், பெரிய நடிகரின் பட வாய்ப்பு பறிபோய் உள்ளதால், அடுத்தடுத்த வாய்ப்புகள் வருவது கடினம் என்பது, திரையுலகில் கருதப்படுகிறது.


மேலும் அஜித், அந்த படத்தை நிராகரித்ததற்கான காரணம் விக்னேஷ் சிவனின் பழக்கவழக்கம் சரி இல்லை, கதை பிடிக்கவில்லை என பல காரணங்கள் இணையத்தில் உலாவி வருகிறது. ஆனால், உண்மையான காரணம் என்ன என்று, தற்போது வரை வெளியாகவில்லை.

ஆனால், இப்போது அஜித் படம் போனால் என்ன? பெரிய ஸ்டாரே கைவசம் உள்ளார் என்ற தெனாவட்டில், விக்னேஷ் சிவன் உள்ளாராம். அதாவது, 'கையில் வெண்ணெய் இருக்கும்போது, எதுக்காக நெய்க்கு அலையணும்?' என்ற முடிவுக்கு தற்போது விக்னேஷ் சிவன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.


பெரும்பாலும் காமெடி படங்களை இயக்கி வந்த விக்னேஷ் சிவன், இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையை தயார் செய்து வருகிறார். அதாவது இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.

கோலிவுட் சினிமாவில் 'நம்பர் ஒன்' நடிகையாக இருக்கும் நயன்தாராவை வைத்து படம் இயக்கினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் விக்னேஷ் சிவன் உள்ளார். மேலும் இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' தயாரிக்க இருக்கிறது.


அதுமட்டுமின்றி, அஜித்தின் ஏகே 62 படத்திற்கு முன்னதாகவே இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் விக்னேஷ் சிவன் உள்ளதாக தெரிய வருகிறது. ஆகையால், விரைவில் இந்த படத்தின் கதையை தயார் செய்து, படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளாராம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


அஜித்தை பொருத்தவரை, சினிமா சார்ந்தவர்களை மட்டுமல்ல, மிக சாதாரண மனிதர்களை கூட மதிக்கத் தெரிந்தவர். அரவணைத்து நடப்பவர். சிறந்த பண்பாளர். பெரிய நட்சத்திர நடிகராக இருந்தும், எந்தவித பந்தாவும் காட்டாத எளிய மனிதர். அவருடன் போட்டியிட்டு சவால் விடும் அளவுக்கு, எந்த தகுதியும் இல்லாதவர் விக்னேஷ் சிவன். நயன்தாராவின் கணவர் என்ற அடையாளம் மட்டுமே, அவருக்கு இருக்கிறது. மற்றபடி, அவர் ஒன்றுமே இல்லை என, சமூக வலைதளங்களில் பொரிந்து தள்ளி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

Updated On: 10 Feb 2023 7:16 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...