/* */

Vettaiyaadu Vilaiyaadu படத்துலேர்ந்து வெளியேறிய கமல்ஹாசன்! அப்றம் நடந்ததுதான் ஹைலைட்டே

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? கமல்ஹாசனின் தீவிர ரசிகரா இருந்தாலும் கௌதம் மேனன் ஆரம்பத்துல சூர்யாவ வச்சி காக்க காக்க முடிச்சதும் மோகன்லால்கிட்ட கதை சொல்ல போயிருக்காரு.

HIGHLIGHTS

Vettaiyaadu Vilaiyaadu படத்துலேர்ந்து வெளியேறிய கமல்ஹாசன்! அப்றம் நடந்ததுதான் ஹைலைட்டே
X

வேட்டையாடு விளையாடு படப்பிடிப்பு தளத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இயக்குநர் கௌதம்

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? கமல்ஹாசனின் தீவிர ரசிகரா இருந்தாலும் கௌதம் மேனன் ஆரம்பத்துல சூர்யாவ வச்சி காக்க காக்க முடிச்சதும் மோகன்லால்கிட்ட கதை சொல்ல போயிருக்காரு. வேட்டையாடு விளையாடு படத்தோட ஒன்லைன்தான். ஆனா கொஞ்சம் மலையாளத்துக்கு ஏத்தமாதிரி கதை.

அதே நேரம் கமல்ஹாசன்கிட்ட டேட் வாங்கி வச்சிருந்தாங்க ரோஜா கம்பைன்ஸ்னு ஒரு கம்பெனி. அந்த சமயத்துல காக்க காக்க டிரெண்ட் செட்டிங் படம் அதே மாதிரி ஒரு ஆக்ஷன் திரில்லர் எடுக்கணும்னு ரோஜா கம்பைன்ஸ் கௌதம் மேனன்கிட்ட பேச அது ரொம்ப நாளா இழுத்துக்கிட்டே இருந்துது.


கமல்ஹாசன்தான் ஹீரோனு ரோஜா கம்பைன்ஸ் உறுதியா இருந்ததால ரொம்ப தாமதமா ஆனா நம்ம கெரியர் என்ன ஆகும்னு யோசிச்ச கௌதம் வேற படம் பண்ண போறேன் ஆள விடுங்கன்னு சொல்ல, அந்த நேரத்துல தசாவதாரம் கதை தயார் பண்ணிட்ருந்த கமல், யப்பா தம்பி வாப்பா இந்த படம் பண்ணலாம்னு கூப்பிட்டிருக்காராம்

முன்னாடி நம்ம மணிரத்னத்தையும் இதே மாதிரி ஒரு தருணத்துல விக்ரம் படத்த இயக்க கமல் கூப்பிட்டது நினைவிருக்கலாம். ஆனா தசாவதாரம் ரொம்ப பெரிய படம் நான் தாங்குவேனா தெரியலனு நகர்ந்து போயிட்டாரு. சரி அப்ப வேற என்ன படம் பண்ணலாம்னு கேட்க, அவரும் கமல்ஹாசன் நம்ம ஆஸ்தான ஹீரோ, சரி யோசிக்கலாம்னு உக்காந்து பேசுறாங்க.


இந்த நேரத்துல உங்களுக்கு ஒரு விசயம் நினைவுக்கு வரலாம். இதேமாதிரிதான் விக்ரம் படத்தோட தொடர்ச்சியா ஒரு படம் எடுக்கலாம்னு ஐடியா கமல் சொல்ல லோகேஷ் கனகராஜ் அத புடிச்சி வேற லெவல்ல ஒரு சூப்பர் ஹிட் படத்த கொடுத்தாரு.

லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசனோட சேர்ந்து படம் செய்யணும்னு ஒரு ஆசை இருக்கு. ஆனா என்ன வித்தியாசமா பண்ணிட முடியும். கமல்ஹாசன் எல்லாமே பண்ணிட்டாரு. கமல்ஹாசன் அவர்கள நேர்ல சந்திக்கிறப்ப நீங்க பண்ணாத இல்ல பண்ணனும்னு நினச்சி பண்ண முடியாம போன எதாது கதை இருக்கா சார்னு கேட்க, விக்ரம் படத்தோட ஆரம்ப கட்ட கதைய ஒன்லைன்ல சொல்லிருக்காரு கமல்ஹாசன். அத வச்சி தான் இப்படி ஒரு சூப்பர் ஹிட் படம் வந்திருக்கு. அதேமாதிரிதான் வேட்டையாடு விளையாடு படத்துக்கு ஆரம்ப கட்ட ஐடியா கொடுத்ததும் சாட்ஜாத் நம்ம உலகநாயகன்தான்.

தசாவதாரம் படத்த நீங்க பண்ணுங்கன்னு கமல்ஹாசன் சொன்னப்ப இல்லிங்க சார் இது என் ஸ்டைல் இல்லனு, தான் கொண்டு வந்த ஒரு கதைய சொல்லிருக்காரு கௌதம். கமல்ஹாசன் அவர்களும் சரி டெவலப் பண்ணுங்கன்னு 40 நாட்கள் டைம் கொடுத்திருக்காரு. கிட்டத்தட்ட கதை முடியுற நேரத்துல மீண்டும் கமல்ஹாசன சந்திக்குற வாய்ப்பு கௌதமுக்கு கிடைச்சிருக்கு. அந்த நேரம் கமல்ஹாசனுக்கு வேறொரு ஐடியா இருந்திருக்கு. ராம் கோபால் வர்மா படங்கள்ல வர்றமாதிரி கிட்டத்தட்ட கேங்க்ஸ்டர் டிரையாலஜி படத்துல வர்ற மாதிரி ஒரு ஷார்ப்பான கொலை திரில்லர் படம் பண்லாமான்னு கேக்க கௌதம் தன்கிட்ட அப்படி ஒரு கதை இருக்குன்னு சொல்லி சொன்ன கதைதான் வேட்டையாடு விளையாடு படத்தோடது.

இதுல என்ன சுவாரஸ்யம்னா கௌதம் மேனன் ஆரம்பத்துல கமல்ஹாசன வச்சி இப்படி ஒரு மாஸான ஆக்ஷன் படம் எடுக்கத்தான் நினைச்சு பாக்க வந்திருக்காரு. அவர்தான் 2005 லயே மோகன்லால வச்சி படம் எடுக்க ஒரு கதை ரெடி பண்ணி வச்சிருந்தார்ல.


இன்னொரு சுவாரஸ்யமான தகவல் சொல்றேன் கேளுங்க. இந்த படத்துக்கு முதல்ல கௌதம் மேனன் வைக்க இருந்த பேரு தடையற தாக்க. அதுக்கப்றம் சிப்பாய் ங்குற டைட்டிலோட படத்த எழுத ஆரம்பிச்சிருக்காரு.

துரதிஷ்டவசமாக காஜாமொய்தீன் மரணத்துனால படம் நின்னுடிச்சி. இதனால இந்த புராஜக்ட்ல இருந்து வெளியே போக கமல்ஹாசன் முடிவு பண்ணிருந்தாரு. ஆனா கௌதம் மேனனுக்காக பொறுத்துக்கிட்டாரு. கௌதம் மேனன் அவ்ளோ கஷ்டப்பட்டு எடுத்த படம் ரிலீஸ் ஆனதும் கிடைச்ச வெற்றியால அவரோட கஷ்டங்கள் எல்லாமே நினைவுகளா மாறிடிச்சி.

Updated On: 21 Jun 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்