/* */

திமுகவில் சாதி பாகுபாடு... உதயநிதியை மாட்டிவிட்ட பா ரஞ்சித்!

மாமன்னன் திரைப்படத்தைப் பாராட்டி டிவிட்டரில் கருத்து தெரிவித்த பா ரஞ்சித் அதில் உதயநிதி ஸ்டாலினை மாட்டி விடுவதுபோல ஒரு பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.

HIGHLIGHTS

திமுகவில் சாதி பாகுபாடு... உதயநிதியை மாட்டிவிட்ட பா ரஞ்சித்!
X

மாமன்னன் திரைப்படத்தைப் பாராட்டி டிவிட்டரில் கருத்து தெரிவித்த பா ரஞ்சித் அதில் உதயநிதி ஸ்டாலினை மாட்டி விடுவதுபோல ஒரு பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.

திமுகவில் இன்று வரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை உதயநிதி ஸ்டாலின் அறிந்தே இருப்பார் எனவும், அதனை களைவதற்கு உதயநிதி ஸ்டாலின் இந்த திரைப்படத்தின் வழியாக ஆரம்பிப்பார் என்று பா ரஞ்சித் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் மாமன்னன் படத்தையும் மாரி செல்வராஜையும் பாராட்டி பேசியிருக்கிறார் அவர்.

மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று #மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு @Udhaystalin திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற @mari_selvaraj #வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!

இவ்வாறு பா ரஞ்சித் பதிவிட்டுள்ளார். இதனால் திமுக தொண்டர்களுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக இணையதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் திமுகவில் சாதி வேறுபாடு இல்லை எனவும் வேறு சிலர் திமுக சமூக நீதிக்கான கட்சி என்று சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் மாமன்னன் திரைப்படத்தில் காட்டப்பட்டிருந்த அனைத்துமே திமுகவில் நடந்து வரும் நிகழ்வு தானே என்று தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 3 July 2023 7:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு