/* */

லியோ நாயகி திரிஷா வெளியிட்ட புகைப்படம்! அப்ப அது கன்பாஃர்ம்!

இன்னும் சிலர் அவருக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் சண்டை. லியோ படத்திலிருந்து வெளியேறிவிட்டார் திரிஷா எனவும் வதந்தி கிளப்பினர். இப்படி பல விசயங்களை பொய் என நிரூபிக்கும் வகையில் ஏற்கனவே திரிஷாவின் தாயார் விளக்கமளித்திருந்தார்

HIGHLIGHTS

லியோ நாயகி திரிஷா வெளியிட்ட புகைப்படம்! அப்ப அது கன்பாஃர்ம்!
X

லியோ பட நாயகி திரிஷா புகைப்படம்

லியோ படத்தின் நாயகி திரிஷா வெளியிட்ட புகைப்படத்தால் பல விசயங்கள் புரளி என்பது தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வாரிசு படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் புதிய படம் லியோ. இந்த படம் விஜய் நடிக்கும் 67வது படமாகும். இதேபோல இந்த படத்தின் நாயகியான திரிஷாவுக்கும் இது 67வது படமாகும். இப்படி கோ இன்ஸிடென்ட்டாக அமைந்தது மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

வெறும் 20,25 படங்கள் நடித்துவிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள் பல நடிகைகள். ஆனால் திரிஷா மட்டுமே இத்தனை வருடங்கள் சினிமா துறையில் நிலைத்து நிற்கிறார். கடந்த 2003ம் ஆண்டு துவங்கிய அவரது சினிமா பயணம் இப்போது 2023 ம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

விக்ரம் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படமான லியோவில் நாயகி திரிஷா என்பதால் பலரும் முதலில் ஆச்சர்யப்பட்டார்கள். லோகேஷ் படத்தில் கதாநாயகிக்கு என்ன பெரிய வேலை இருக்கப் போகிறது. அவர் முதல் பத்து நிமிடத்திலேயே இறந்துவிடுவார். வில்லன் கதாபாத்திரம் கதாநாயகியை கொன்று விடும். திரிஷாவுக்கு பெரிய காட்சிகள் எதுவும் இருக்காது என்றனர்.

அவர்களின் கூற்றை நிரூபிக்கும் வகையில் திரிஷா இரண்டு நாட்களிலேயே காஷ்மீரிலிருந்து சென்னை திரும்பிவிட்டார் என யாரோ ஒருத்தர் புகைப்படத்தை போட்டு வைரல் செய்தனர். மேலும் திரிஷாவுக்கு குளிர் ஒத்துக்கொள்ள வில்லை அதனால் அவரே கிளம்பி வந்துவிட்டார் எனவும் கூறினர்.

இன்னும் சிலர் அவருக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் சண்டை. லியோ படத்திலிருந்து வெளியேறிவிட்டார் திரிஷா எனவும் வதந்தி கிளப்பினர். இப்படி பல விசயங்களை பொய் என நிரூபிக்கும் வகையில் ஏற்கனவே திரிஷாவின் தாயார் நமது செய்தியாளருக்கு கூறியிருந்தார். இப்போது திரிஷாவே இந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

திரிஷா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் காஷ்மீரிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சாட்டிலைட் புகைப்படத்தை பகிர்ந்து தான் காஷ்மீரில் இருப்பதை உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Updated On: 9 Feb 2023 7:14 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!