/* */

சினிமாவில் நுழையும் டோனி

கிரிக்கெட் வீரர் டோனி சினிமா படங்கள் தயாரிக்க தனியாக நிறுவனம் தொடங்கி உள்ளார்.

HIGHLIGHTS

சினிமாவில் நுழையும் டோனி
X

டோனி பட நிறுவனம்.

இந்திய கிரிக்கெட் அணியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற சிறப்பு மிக்க கேப்டன் என்ற பெருமைக்கு உரியவர் மகேந்திரசிங் டோனி. இவரை அனைவரும் எம்.எஸ். டோனி என்று சுருக்கமாக அழைத்து மகிழ்வார்கள். ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது திறமையால் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார். இந்திய அணி பல வெற்றிகளை குவிக்க முக்கிய காரணமாக டோனி இருந்துள்ளார். 2007ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இவர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. இதன் மூலம் டோனி கிரிக்கெட் உலகில் பிரபலமானார். அடுத்து, 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை டோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. டோனியால் இந்த பெருமை கிடைத்தது. தொடர்ந்து பல ஒருநாள் போட்டிகளில் இவர் தலைமையிலான இந்திய அணி வெற்றிகளை குவித்தது. இதனால் ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தை இந்திய அணி இன்றும் தக்கவைத்து இருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகினாலும் தொடர்ந்து கிரிக்கெட் ஆடிவருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பல கோடி ரூபாயுக்கு டோனி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார், ஐபிஎல்லில் மதிப்பு மிகுந்த விளையாட்டு வீரர். டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக தற்போது உள்ளார்.

டோனி கிரிக்கெட்டை தவிர சினிமா மீது ஆர்வம் உள்ளவர். பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் சினிமா தயாரிப்பில் ஈடுபட உள்ளார். இதற்காக தனி தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார். நடிகர் ரஜினிகாந்திடம் முக்கிய உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் டோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைத்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு 'டோனி எண்டர்டெயின்மென்ட்' என்று பெயரிட்டுள்ளார்.

தற்போது திரைப்படம் தயாரிப்பு பணியில் நுழைவதற்கான ஆயத்தங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். இவருடைய படநிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் படங்கள் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்னவே அவர் தயாரித்த ரோர் ஆப்தி லையன் என்ற ஆவண படம் ஹாஸ்டாரில் வெளியாகியிருந்தது. இதையடுத்து, 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆவணப்படமும், புராணத்தை அடிப்டையாகக் கொண்ட திரில்லர் படம் ஒன்றையும் டோனி பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதைத் தெடர்ந்து பல தென்னிந்திய மொழி சினிமாக்களை தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார். டோனி சினிமாவில் நுழைந்துள்ளது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. அவருக்கு சமூக இணையத் தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Updated On: 10 Oct 2022 4:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது