/* */

Thiruvin Kural திருவின் குரல் படம் எப்படி இருக்கு?

அறிமுக இயக்குநர் ஹரிஸ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, ஆத்மிகா, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள புதிய படம் திருவின் குரல். தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் இந்த படத்தின் கதை சைக்கோ திரில்லர் வகையைச் சார்ந்தது.

HIGHLIGHTS

Thiruvin Kural திருவின் குரல் படம் எப்படி இருக்கு?
X

அறிமுக இயக்குநர் ஹரிஸ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, ஆத்மிகா, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள புதிய படம் திருவின் குரல். தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் இந்த படத்தின் கதை சைக்கோ திரில்லர் வகையைச் சார்ந்தது.

காது கேளாத வாய்ப்பேச முடியாத ஒருவராத இந்த படத்தின் நாயகன் வருகிறார். அவரைச் சுற்றிதான் கதை நிகழ்கிறது. மற்றவர்களின் உதவியுடன் அவர் நடந்தவற்றை கண்டுபிடிக்கிறார். இது திரில்லிங் காட்சிகளுடன் விவரிக்கப்படுகிறது.

லைகா தயாரிப்பில் இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வந்துள்ளது.

பத்து தல இந்த ஓடிடி-ல தான் வருதா? என்னைக்கு ரிலீஸ் தெரியுமா?

சென்னை, காரைக்கால், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இந்த படம் படம்பிடிக்கப்பட்டிருந்தது. சாம் சி எஸ் இசையில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கதைச் சுருக்கம் | Thiruvin Kural movie Story

காது கேட்காத வாய் பேச முடியாத இளைஞன் அருள்நிதி. அவருடைய அப்பா பாரதிராஜா விபத்து ஒன்றில் சிக்க மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்குள்ள ஒருவருடன் பகையை வளர்த்துக் கொள்கிறார் அருள்நிதி. அதன் காரணமாக பழி தீர்க்க வருகிறது ஒரு கும்பல். இவர்களிடமிருந்து தன்னுடைய தந்தையையும் குடும்பத்தையும் காப்பாற்ற அருள்நிதி எடுக்கும் முயற்சியே படம்.

விமர்சனம் | Thiruvin Kural Padam Eppadi irukku

அருள்நிதியின் நடிப்பு பிரமாதம். காது கேட்காத, வாய் பேச வராத கோபக்காரராக நடித்திருக்கிறார் அருள்நிதி. மிக நுண்ணிய நடிப்பை அழகாக காட்டியிருக்கிறார் அவர். அவருக்கும் பாரதி ராஜாவுக்கும் இடையில் இருக்கும் பாசம் அருமையாக கன்வே ஆகியிருக்கிறது.

பாரதி ராஜா நம்ம வீடுகளில் இருக்கும் வயதான அப்பாக்களை நினைவு படுத்துகிறார். நடிப்பு அவருக்கு சொல்லியா தரவேண்டும். பரிதாபமான முக பாவனைகள் காட்டி நம்மை அழ வைக்கிறார்.

ஆத்மிகா கதாபாத்திரம் கதைக்கு தேவையில்லாத ஆணி.

shakuntalam review சாகுந்தலம் படம் எப்படி இருக்கு?

கொலைகார கும்பலில் நடித்துள்ள நடிகர்கள் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் அஷ்ரஃப் என்பவர் தன் வில்லத்தனத்தால் நம்மையே அச்சுறுத்த முனைந்திருக்கிறார்.

அனைவரது நடிப்பும் பிரமாதம்தான் இருந்தாலும் கதை அந்த அளவுக்கு ஆழமானதாக இல்லை. நமக்கே ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பு தட்டி விடுகிறது. அருள்நிதிக்காக படத்தை பார்த்துவிட்ட ஃபீலிங்தான் வருகிறது. பின்னணி இசை கூடுதல் பலம் சேர்க்கிறது ஆனால் பாடல்கள் மிகவும் போரடிப்பது போல இருக்கிறது. கதையை மேலும் தொய்வாக்கி விடுகிறது.

சென்டிமெண்ட் காட்சிகளில் கொஞ்சம் ஓவராக புழிந்து எடுத்துட்டாங்க என்று ரசிகர்களே கூறி வருகிறார்கள்.

Updated On: 13 May 2023 4:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு